SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேங்காய்சாதம்

2020-02-11@ 09:57:35

தேவையான பொருட்கள்

உதிராக வடித்த பச்சரிசி சாதம் - 2 கப்
துருவின தேங்காய் - அரை கப்
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 1/2 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல் - 2
பச்சைமிளகாய் - 1
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 இணுக்கு
நிலக்கடலை அல்லது முந்திரிப்பருப்பு - கைப்பிடி அளவு

செய்முறை:

சாதத்தை உதிராக வடித்து ஆறவிடவும். துருவிய தேங்காயை வறுத்து ஆற விடவும். தேங்காய் எண்ணெயில் தாளிதப் பொருட்களைத் தாளித்து வறுத்து தேங்காய்த்துருவலையும் உப்பையும் சேர்த்து நிலக்கடலை அல்லது முந்திரிப்பருப்பையும் கலந்து ஒரு புரட்டு புரட்டி ஆற விடவும். ஆறிய சாதத்துடன் வறுத்துத் தாளித்த கலவையைக் கலக்க ருசியான தேங்காய்ச்சாதம் தயார். பூஜை நேரங்களில் இறைவனுக்கு நைவேத்தியம் செய்ய அம்சமான சித்ரான்னம் இந்தத் தேங்காய்சாதம். இரண்டும் வெந்ததும் சர்க்கரையைச் சேர்த்து கரைந்ததும், பாலைச் சேர்த்து கிண்டிவிட்டு, தேவையானால் தண்ணீர் சேர்த்து, குங்குமப்பூ, பொடித்தஏலக்காய் சேர்த்து இறக்கி, நெய்யில் முந்திரி - திராட்சையை வறுத்து சேர்க்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-02-2020

    28-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்