SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கருவேப்பிலை சாதம்

2020-02-03@ 15:47:14

தேவையான பொருட்கள்:
 
அரிசி :  2 கப்
கருவேப்பிலை: ஒரு கப்
தேங்காய் துருவல்: அரை கப்
கடலை பருப்பு: ஒரு டேபிள்ஸ்பூன்
காய்ந்த கருவேப்பிலை: 4
மிளகு: ஒரு டீஸ்பூன்
பெருங்காயம்: சிறு துண்டு
நெய்: ஒரு டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்: ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு: அரை டேபிள்ஸ்பூன்
முந்திரி பருப்பு: 10
உப்பு ஒரு டேபிள்ஸ்பூன் அல்லது  தேவையான அளவு

செய்முறை:

அரிசியை வேகவைத்து குழையாமல் பார்த்து வடித்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு பெருங்காயம் கருவேப்பிலை மிளகாய் ஆகியவற்றை சிவக்க வதக்கவும் பின்னர் அதில் மிளகு சேர்த்து சிறிது வறுத்து அதில் கறிவேப்பிலையைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பின் தேங்காய் துருவலைச் சேர்த்து சிறிது வதக்கி இறக்கி வைக்கவும். ஆறிய பின்னர் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும் .வாணலியில் நெய் விட்டு கடுகு சேர்க்கவும் கடுகு வெடித்தவுடன் முந்திரி பருப்பை சேர்த்து சிவக்க வறுக்கவும் ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி போடவும் பின் சாதத்தை போட்டு லேசாக கிளறவும் கருவேப்பிலை பொடி உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும். இப்போது சுவையான கருவேப்பிலை சாதம் பிரசாதம் தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்