SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இறை வேண்டலும் அதன் விளைவும் . . .

2020-01-31@ 11:26:57

கிறிஸ்தவம் காட்டும் பாதை

நீங்கள் இறைவேண்டல் செய்பவரா? அவ்வாறு செய்யும்போது இறைவனிடத்தில் விசுவாசத்தோடு கேளுங்கள். உங்கள் தந்தையிடம் உங்களுக்கு தேவையான பொருட்களை உரிமையாய் கேட்பது போல, உங்கள் தேவைகளை ஜெபத்திலே உரிமையாய் கேளுங்கள். மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு கைம்மாறு அளிப்பார்.
 
 ‘‘இயேசு கிறிஸ்துவின் மீதுக் கொள்ளும் நம்பிக்கையின் வழியாக கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்குகிறார். நம்பிக்கை கொள்வோர் அனைவரையுமே அவர் ஏற்புடையவராக்குகிறார். அவர் வேறுபாடு காட்டுவது இல்லை’’, (உரோமையர் - 3: 22) . முதலில் நீங்கள் ஆண்டவருடைய வார்த்தையைக் கேட்டு அதைப் பின்பற்றி அவருக்கு ஏற்புடையவராக நீங்களே உங்களை மாற்றுங்கள். அப்போது நீங்கள் அவர்மேல் வைத்த விசுவாசமானது மலைப்போல் பலமானதாய் உறுதிப்படும். நீங்கள் ஜெபத்திலே எதைக் கேட்கின்றீரோ அப்போதே அதைப் பெற்றுக்கொண்டோம் என  நம்புங்கள். உங்களுடைய தேவைகளை ஆண்டவர் சந்திப்பார்.

வழி இல்லாத இடத்திலும் வழியை உண்டாக்குவார் நம் இயேசு கிறிஸ்து. இறைவேண்டல் செய்யும் போது மற்றும் இறைவாக்குரைக்கும் போதும் ஒவ்வொரு பெண்ணும் கண்டிப்பாக தம் தலையை முக்காடு அணிந்து மூடிக்கொள்ள வேண்டும். ஆண் தம் தலையை மூடிக் கொள்ள வேண்டியதில்லை.‘‘என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை.மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்’’ (மத்தேயு 7: 21) என்கிறார் . நம் இயேசு கிறிஸ்து நாம் ஆண்டவர் கொடுத்த கட்டளைகளுக்கு செவிக்கொடுக்காமல் பாவத்தை விட்டு விலகாமல் இருந்தால், அவரும் நமது வேண்டுதலுக்குச் செவிக் கொடுக்க மாட்டார். அவருடைய பிள்ளைகளாய் நாம் முதலில் மாற வேண்டும்.

‘‘கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும், தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள், தட்டுங்கள் உங்களுக்கு திறக்கப்படும். ஏனெனில், கேட்போர் எல்லாம் பெற்றுக் கொள்கின்றனர், தேடுவோர் கண்டடைகின்றனர், தட்டுவோருக்குத் திறக்கப்படும்’’.(மத்தேயு 7 : 7) என்கிறார் நம் ஆண்டவர். எவராவது ஒருவர் அப்பத்தைக் கேட்கும் தம் பிள்ளைக்குக் கல்லைக் கொடுப்பாரா? அல்லது பிள்ளை மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா?  மனிதராகிய நாமே நம் பிள்ளைகளுக்கு நற்கொடைகளை அளிக்க அறிந்திருக்கின்றோம். அப்படியானால் விண்ணுலகில் இருக்கும் நம் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியான நன்மைகள் அளிப்பார் அல்லவா !
    
எனவே உங்களுக்கு என்ன தடையோ என்ன தேவையோ, என்ன பிரச்னையோ என்ன வேதனையோ, எதுவாக இருந்தாலும் அதை ஜெபத்தின் மூலம் ஆண்டவரிடத்திலே கேளுங்கள். அப்போது உங்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். நிச்சயம் ஆண்டவர் பதில் அளிப்பார் உங்களது தேவைகளை சந்திப்பார்.இடைவிடாமல் ஜெபியுங்கள், உங்கள் விசுவாசத்திலே உறுதியாய் இருங்கள். ஆண்டவர் உங்களுக்கு அற்புதங்கள் செய்யார்.

- ஜெரால்டின் ஜெனிபர்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்