SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பழங்காமூர் காசி விஸ்வநாதர்

2020-01-14@ 10:26:52

தொண்டை நன்நாட்டில் உள்ள மிகப்பழமை வாய்ந்த தலங்களும் ஒன்றாகத் திகழ்கிறது பழங்காமூர் ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயம். ஈசனின் இடபாகம் பெற வேண்டிய அம்பிகை காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்டு, திருவண்ணாமலை நோக்கி வரும் வழியில் ஓர் வாழைக்காட்டில் (கதலிவனம்) வாழைப்பந்தல் அமைக்கின்றாள்! மணல் லிங்கம் பிடித்து வழிபட எத்தனிக்கின்றாள்! நீர் தேவை! உடன் தனது பிள்ளைகளாக கணபதியையும், கந்தனையும் அழைத்து நீர் கொண்டு வர கட்டளையிடுகின்றாள்! கணபதி மேற்கு நோக்கி சென்றார்.

அங்கே ஜவ்வாது மலை அடிவாரத்தில் ஜமதக்னி முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அதை கண்ட கணபதி, காகமாக உருவெடுத்து, புனிதம் மிகுந்த அவரது கமண்டலத்தைக் கவிழ்க்க, அதிலிருந்து கங்கையைக் காட்டிலும் புண்ணியம் மிகுந்த நீர் நதியாகப் பெருக்கெடுத்து ஓடியது. அந்நதியே கமண்டல நதியானது. இந்தக் கமண்டல நதியோடு, சம்புவராயநல்லு என்னுமிடத்தில் நாக நதி இணைவதால் இந்த நதியை கமண்டல நாக நதி என்று அழைப்பர்! கமண்டல நாகநதியின் வடகரையில், காசியைப் போன்றே அமையப்பெற்றுள்ள ஊர்தான் பழங்காமநல்லூர் என்னும் பழங்காமூர். வாரணாசியைப் போன்றே இங்கும் ஸ்ரீகாசி விஸ்வநாதர், அன்னை ஸ்ரீ விசாலாட்சியோடு கோயில் கொண்டு அருட்பாலிக்கிறார்.

த்ரோயுகத்தில் இத்தலத்தில் ரிஷ்ய சிருங்கர் எனும் கலைக்கோட்டு முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் பன்னெடுங்காலமாய் கமண்டல நதியில் ஸ்நானம் செய்து, வடகரையில் உள்ள காசி விஸ்வநாதரை அனுதினமும் வழிபட்டு வந்தார்! ஒரு சமயம் வசிஷ்டரின் ஆலோசனைப்படி தென்னகம் வந்த தசரதரின் வேண்டுகோளுக்கிணங்க அக்கரைக்கு(கமண்டல நதியின் தென்கரைக்கு) சென்று புத்திரகாமேஷ்டி யாகத்தை அவருக்கு அற்புதமாய் நடத்தித் தந்தார். மேலும், தசரத மகா சக்ரவர்த்தியின் விருப்பிற்க்கிணங்கி, தசரதரின் துணையோடு ஸ்ரீ புத்திரகாமேஷ்டி ஈஸ்வரையும், நிறுவி, வழிபாடுகள் நடத்தினார்.

ரிஷ்யசிருங்கரின் காலத்திற்கும் முன்பே கமண்டலநதியின் வடகரையில் தானாக பூமியிலிருந்துத் தோன்றியப் பெருமானாக ஸ்ரீ காசி விஸ்வநாதர் வீற்றெழுந்து அருட்பாலித்து வருவது சிறப்புக்குரியதாகும்! கருவறையுள் அழகே உருவாய் லிங்கத் திருமேனி கொண்டு சாய்ந்த நிலையில் அற்புதமாக திருக்காட்சி தந்து, அருள்புரிகின்றார் ஸ்ரீ காசி விஸ்வநாதர். இறைவனுக்கு(வாம பாகத்தில்) இடப்புறம் ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் புன்னகை ததும்ப, புன்முறுவலுடன் அருள்மழை பொழிகின்றாள். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் இருந்து செய்யார் செல்லும் வழியில், ஆரணியிலிருந்து 3.கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பழங்காமூர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-02-2020

  23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • theepam2020

  மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • UkraineCoronaProtest

  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

 • puthu2020

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்