SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நம்பிக்கைக்குரிய பணியாளர் யார்?

2019-12-31@ 14:38:37

‘‘தன் வீட்டு வேலையாட்களுக்கு வேளா வேளை உணவு பரிமாறத்தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான பணியாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும்போது தன் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறு பெற்றவர். அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அப்பணியாளர் பொல்லாதவராய் இருந்தால் தன் தலைவர் வரக்காலம் தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டு தன் உடன் பணியாளரை அடிக்கவும், குடிகாரருடன் உண்ணவும், குடிக்கவும் தொடங்குவான். அப்பணியாளர் எதிர்பாராத நாளில் அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வருவார்.

அவர் அவனைக் கண்டதுண்டமாய் வெட்டி வெளிவேடக்காரருக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். அங்கே அழுகையும், அங்கலாய்ப்பும் இருக்கும்.’’ - (மத்தேயு 24: 45-51) மிகவும் வளமான நாட்டை அரசன் ஆண்டு வந்தான். நாட்டில் எந்தக்குறையுமின்றி மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டிருந்தான். அரசன் அரண்மனையை விட்டு வெளியேறி பொதுமக்கள் நேரில் வந்து பார்ப்பதில்லை. அமைச்சரவைக் கூட்டங்களில் யாரும் நாட்டின் குறைகளை சுட்டிக்காட்டுவதையும் அரசன் விரும்புவதில்லை.

எனவே, பெரும்பாலான அமைச்சர்கள் நாட்டில் எல்லாம் சிறப்பாக இருக்கிறது, மக்கள் எந்தக்கஷ்டமும் இல்லாமல் கொடுக்கும் இலவசங்களைப் பெற்று வளமாக வாழ்கிறார்கள் என்று கூறி நல்லாட்சிதான் நடக்கிறது என்று துதி பாடிக்கொண்டிருந்தான். அரசனுக்கு மகிழ்ச்சி! மனசாட்சியுள்ள சில மறைமுகமாக, உண்மையைச் சொன்னார்கள். அரசன் அதைப்புரிந்துகொள்ள இயலவில்லை. பொருட்படுத்தவும் இல்லை. நாட்டைப்புயல் தாக்கியது, வெள்ளம் சூழ்ந்தது. விளைநிலங்கள் கடுமையாகப் பாதித்தது. மக்கள் பரிதவித்தார்கள்.

அரசனிடம் தவறான தகவல்களை அமைச்சர்கள், அதிகாரிகள் சொன்னார்கள். மக்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். இதைப்பற்றியும் அரசனிடம் தவறான தகவல்களைச் சொன்னார்கள். அண்டை நாட்டு அரசன் படைபலத்துடன் வந்துகொண்டிருந்தான். இதனை அரசனுடன் இருந்தவர்கள் தங்களைக்காண வந்திருக்கிறான் என்றார்கள். அரசன் கைது செய்யப்பட்டான். நாட்டை நன்றாகத்தானே ஆட்சி செய்தேன். எங்கும் எதிலும் தவறே நடக்கவில்லையே! என்று புலம்பியபடியே சிறைக்குச் சென்றுகொண்டிருந்தான்.

நமது குற்றங்கள் சுட்டிக்காட்டப்படும்போது அக்கறையோடு ஆராய வேண்டாமா? அவற்றைக்கேட்டுக்கொள்ளும் மனப்பக்குவம் வளர வேண்டாமா? உடனிருந்தே குழி பறிக்கும் கூட்டத்தைப் புரிந்துகொள்ள வேண்டாமா? ‘‘முதியோரே, இதைக்கேளுங்கள்; நாட்டிலுள்ள குடிமக்களே, நீங்கள் அனைவரும் செவி கொடுங்கள். உங்கள் நாள்களிலாவது, உங்கள் தந்தையின் நாட்களிலாவது இதுபோன்று நடந்ததுண்டோ? இதைக் குறித்து உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள். உங்கள் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்குக் கூறட்டும்.

அவர்களின் பிள்ளைகள் அடுத்த தலைமுறைக்குக் கூறட்டும். வெட்டுப்புழு தின்று எஞ்சியதை இளம் வெட்டுக்கிளி தின்றது. இளம் வெட்டுக்கிளி தின்று எஞ்சியதைத் துள்ளும் வெட்டுக்கிளி தின்றது. துள்ளும் வெட்டுக்கிளி தின்று எஞ்சியதை வளர்ந்த வெட்டுக்குளி தின்றழித்தது.’’ - (யோவேல் 1: 2-4)

தொகுப்பு: ‘‘மணவைப்பிரியன்’’ ஜெயதாஸ் பெர்னாண்டோ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • drawing20

  அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு ஆக்ராவில் கலைநயமிக்க சுவரோவியங்கள் வரையும் பணி தீவிரம்

 • 19-02-2020

  19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • award20

  விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

 • tenish2020

  டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • america20201

  இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்