SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆறு தத்துவங்கள்

2019-12-31@ 10:22:44

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்-51

பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும்
மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளிவெளி ஆகியிருக்கும் உன்றன்
அருள் ஏதறிகின்றிலேன் அம்புயாதனத் தம்பிகையே.
- பாடல் 36

மானுடர்கள் எதை விரும்ப வேண்டும், எதை விரும்பக் கூடாது, ஏன் விரும்ப வேண்டும் எப்படி விருப்பம் தோன்றுகிறது, அது எப்படி வளர்கிறது, வளர்ந்த பிறகு  நம்மை எப்படி ஆளுகிறது என்பதை எல்லாம் மிக நுட்பமாகவும், சரியாகவும் சாத்திரங்கள் விளக்கியிருக்கிறது. அப்படி விளக்க முடியாதவற்றை விளக்கிக்  கூறுவது தரிசன சாத்திரம் எனப்படும். தரிசனம் என்ற வட சொல்லிற்கு விளக்குதற்குரிய இறைவனையும், ஆன்மாவையும் இவ்வுலகத்தின் அடிப்படையையும்,  விளக்கிக் காண்பிப்பது சாத்திரம் என்பது பொருள்.

இந்தப் பாடலை பொறுத்தவரை ஆறு தரிசன சாத்திரங்களையும் ஒருங்கே பயன்படுத்தி அவற்றின் சாராம்சத்தை ஒவ்வொரு வரியிலும் எடுத்துரைத்திருக்கிறார் .  இது அபிராமி பட்டரைத் தவிர வேறு ஒருவராலும் இயலாது.

தரிசனமானது சாங்கியம், யோகம், பூர்வ மீமாம்சா உத்தர மீமாம்சா, நியாயம், வைசேசிகம், என்ற ஆறையும் ‘‘பொருளே’’ என்று துவக்கி ‘‘அம்புயா தனத்து  அம்பிகையே’’ என்று முடியும் வரை பயன்படுத்தியிருக்கிறார். இந்த பாடல் பாராயணத்துக் குரியதல்ல, பழகுதற்குரியதல்ல அனுபவத்திற்குரியதல்ல. இதை  மீண்டும், மீண்டும் தியானிப்பதனால் மட்டுமே நாம் சிலவற்றை உணர்ந்து கொள்ள முடியும். இந்தப் பாடலைப் பொறுத்தவரை கொடுக்கப்பட்ட விளக்கமானது  நூற்றில் ஒரு சதவிகிதம் கூட இல்லை. வேகத்தை ஒரு வரியில் சுருங்கச் சொல்வதை மகாவாக்கியம் என்கின்றார்கள்.

உபநிஷத்தில் - உலகியல் வழக்கில் ½ கிலோ எள்ளை எடுத்து விதைத்தால் ½ வேலி நிலம் அளவிற்கு விதைக்கலாம். அது மேலும் வளர்ந்தால் 1000 மடங்கு  எள்ளை தோற்றுவிப்பதாகும்.

இந்த ஆறு வரிகளை தியானித்து இந்த பாடலுக்குள் நுழையச் சொல்கிறேன்.
 
பொருளே பொருள் முடிக்கும் போகமே - நியாயம், வைசேசிகம் அருள் போகம் செய்யும் மருளே மருளில் வரும் தெருளே சாங்கியம், யோகம் என் மனத்து  வஞ்சத்து இருள் ஏதும் இன்றி ஓளிவெளி ஆகியிருக்கும் உன்றன் அருள் ஏதறிகின்றிலேன் - பூர்வ மீமாம்சா, அம்புயா தனத்து அம்பிகையே - உத்திர மீமாம்சா  ஆறு சாத்திரத்தின் விதை இந்த பாடல் இந்த விதையை விதைத்து உமையம்மையின் அருட் பயிறை வளர்ப்போம்.

‘‘பொருளே’’ - என்ற வார்த்தை சக்தி தத்துவ நோக்கில் உலகத்திலுள்ள அனைத்து பொருட்களும் ஒன்பதிற்குள் அடங்கிவிடும் என்கிறது. அந்த ஒன்பது  பொருளையும் அகம், புறம், அகப்புறம் என்று நமக்கு மூன்று வகையில் அறிவிக்க முற்படுகிறது இனி அந்த
மூன்றையும் ஒவ்வொன்றாய் காண்போம். அகப்பொருள் -- 9 , புறப்பொருள் - 9, அகப்புறப் பொருள் -- 9 ஆகமொத்தம் - 27 வகையாகப்பிரியும் சாக்த தத்துவம்.
 
‘‘ஓளிநின்ற கோணங்கள் ஒன்பதும் ேமவி உறைபவளே’’-19  என்பதிலிருந்தும் அறியலாம். அகம் -- யோகமாகேஸ்வரர்.
புறம் -- விநாயகர், அகப்புறம் -- சப்தமாதர்கள், நவசித்தாந்தம் ஒன்றேயாகின்ற இந்த பொருளே அறிந்தவர்களால் பலவாறாக பேசப்படுகிறது. இதையே அபிராமி   பட்டர்.
 
‘‘ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து’’- 56 என்றும், இதையே வேதமானது  ‘‘ஏகம் சது தத் விப்ரா : பகுதா வதந்தி’’ என்கிறது.
‘‘பொருள்முடிக்கும் போகமே’’ - சாக்தசித்தாந்தத்தில் இந்த வார்த்தைகளை புரிந்து கொள்ள நான்கு சொற்களை புரிந்து கொள்ள வேண்டும் இனி கலை  சொற்களை
காண்போம்.
   
இதில் தனு - -என்பது உயிர்களின் உடலை மட்டும் தனித்து குறிக்கின்ற சொல் ‘‘குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பை ’’- 48
காரணம் -  - என்பது புறப்பொருள் சார்ந்து உடலை உள்நோக்கியும் வெளி நோக்கியும் அசைக்கும். கருவியாகிய மனம், சித்தம், புத்தி அகங்காரம் முதலானவை,  ‘‘தளர்வரியா மனம்’’ -- 69.
புவனம் - என்பது ஒவ்வொருவருக்கும் தன்னை தவிந்து இவ்வுலகிலுள்ள அனைத்துமாகும்.

போகம் - - என்பது இந்த உடலானது (தனு) புறப்பொருளோடு காரணத்தின் வழி புவனத்தோடு தொடர்பு கொள்வதால் ஏற்படும் விளைவாகும். இந்த நான்கையும்  சேர்த்தே ‘‘பொருள் முடிக்கும் போகமே’’ என்ற நுட்பமான வரியை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
வையம், துரகம் மதகரி மா மகுடம்…52.
பொருந்து தமனிய காவினில் தங்குவதே  - 74
தங்குவர் கற்பக தாருவின் நீழலில் - - 75 ஆனந்தமாய்  - 11
என்று போகத்தையும் குறிப்பிடுகின்றார்.

‘‘அரும் போகம் செய்யும் மருளே’’  போகம் என்ற சொல்லிற்கு துய்த்தல் அனுபவித்தல் என்பது பொருள். இந்த தூய்தல் என்பது ஐம்புலன்கள், மனம், புத்தி,  அகங்காரம். சரீரம் இவை ஒன்றோடு ஒன்று முறையாக இணைந்த வழி தோன்றுவதே சுக, துக்க உணர்வாகும்.

இது உடலை பொறுத்தவரை முதுமையாகவும், வியாதியாகவும், உள்ளத்தை பொறுத்தவரை மகிழ்வாகவும், கவலையாகவும், அறிவைப் பொறுத்தவரை குழப்பமாகவும், தெளிவாகவும், ஆன்மாவை பொறுத்தவரை அடிமையாகவும், ஆளுமை தன்மையுடையதாகவும், வெளிப்படுவதாகும். அப்படி வெளிப்படையாக  தோன்றுவதே துய்த்தல்.

(தொடரும்)

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kalavaram2020

  டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

 • flight2020

  கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

 • keeladi20

  தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

 • raajeshaathan20

  ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

 • 27-02-2020

  27-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்