SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மார்கழி மாத விசேஷங்கள்

2019-12-16@ 13:54:23

மார்கழி 1, டிசம்பர் 17, செவ்வாய்: சஷ்டி. சகல சர்வாலயங்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை உற்சவாரம்பம். தனுர்மாத பூஜை ஆரம்பம்.

மார்கழி 2, டிசம்பர் 18, புதன்: சப்தமி. திஸ்ரோஷ்டகா. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

மார்கழி 3, டிசம்பர் 19, வியாழன்: அஷ்டமி.  மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் சகல ஜீவகோடிகளுக்கும் படியளந்தருளிய காட்சி.  

மார்கழி 4, டிசம்பர் 20, வெள்ளி: நவமி. சத்குரு ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஆராதனை. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். திருவிடைமருதூர் ஸ்ரீபிரகத்குஜாம்பிகை புறப்பாடு.

மார்கழி 5, டிசம்பர் 21, சனி: தசமி.  திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தஸாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீவரதராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சன சேவை.

மார்கழி 6, டிசம்பர் 22, ஞாயிறு: ஏகாதசி.  மானக்கஞ்சாற நாயனார் குருபூஜை.
 
மார்கழி 7, டிசம்பர் 23, திங்கள்: துவாதசி, திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். (சோம) மஹாபிரதோஷம். திதித்தவயம். ஸ்ரீகாஞ்சி காமகோடிபீடம் ஸ்ரீமகா பெரியவாள் ஆராதனை.

மார்கழி 8, டிசம்பர் 24, செவ்வாய்: திரயோதசி. கல்பட்டு ஸ்ரீசுயம்பிரகாச அவதூதாள் ஆராதனை. மாத சிவராத்திரி.

மார்கழி 9, டிசம்பர் 25, புதன்: சதுர்த்தசி. திருவையாறு அமாதீர்த்தம், ஸ்ரீபாம்பன் சுவாமிகள் மயூர வாகன சேவை. கரிநாள்.

மார்கழி 10, டிசம்பர் 26, வியாழன்: அமாவாசை. ஹனுமத் ஜயந்தி, சூரிய கிரகணம் சங்கரநாராயண பரப்பிரம்மம் ஆராதனை. மதுரை ஸ்ரீகூடலழகர் சந்நதியில் பெரியாழ்வார் வென்ற கிளி விலாசம் எழுந்தருளி பரத்துவ நிர்ணயம் செய்தருளல்.

மார்கழி 11, டிசம்பர் 27, வெள்ளி: பிரதமை. சகல விஷ்ணுவாலயங்களிலும் பகற்பத்து உற்சவாரம்பம். சந்திரதரிசனம், கரிநாள்.

மார்கழி 12, டிசம்பர் 28, சனி : துவிதியை. திருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வர பாகவான் சிறப்பு ஆராதனை.

மார்கழி 13, டிசம்பர் 29, ஞாயிறு: த்ரிதியை.  முக்கூர் ஸ்ரீவீர ஆஞ்சநேயர் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்சாரதிப் பெருமாள் காளிங்க நர்த்தன திருக்கோலமாய்க் காட்சி. சதுர்த்தி.

மார்கழி 14, டிசம்பர் 30, திங்கள் : சதுர்த்தசி.  ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னார், ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் தலங்களில்
பகற்பத்து உற்சவ சேவை. சதுர்த்தி விரதம்.

மார்கழி 15, டிசம்பர் 31,செவ்வாய்: பஞ்சமி. நகரத்தார் பிள்ளையார் நோன்பு. ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் காளிங்க நர்த்தனக்  காட்சி. ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் உற்சவாரம்பம். திருவல்லிக்கேணி ஏணிக் கண்ணன் திருக்கோலமாய்க் காட்சி.

மார்கழி 16, ஜனவரி 1,புதன் : சஷ்டி. சிதம்பரம், பேரூர், திருவையாறு, செந்தலை, லால்குடி, வரகூர் தலங்களில் திருவாதிரை உற்சவ ஆரம்பம். பிள்ளையார் நோன்பு. தனுர்வியதீபாதம். ஆங்கில புத்தாண்டு.

மார்கழி 17. ஜனவரி 2, வியாழன்: சப்தமி.  ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் கஜேந்திர மோட்ச லீலை. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் புறப்பாடு. திருக்குற்றாலம் ஸ்ரீகுற்றாலநாதர் வெள்ளிச் சப்பரத்தில் பவனி வரும் காட்சி.

மார்கழி 18, ஜனவரி 3,வெள்ளி: அஷ்டமி.  ஆவுடையார்கோவில் ஸ்ரீமாணிக்க வாசகர் திரிபுர ஸம்ஹார லீலை.
 
மார்கழி 19, ஜனவரி 4, சனி: நவமி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீரெங்கமன்னார். ஸ்ரீவைகுண்டம், திருவர குணமங்கை தலங்களில் எம்பெருமான் திருவாய்மொழித் திருநாள் தொடக்கம். திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் ரிஷபாரூட தரிசனம்.  

மார்கழி 20, ஜனவரி 5, ஞாயிறு: நவமி.   ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து நாச்சியார் திருக்கோலத்துடன் அர்ஜூனன் மண்டபம் எழுந்தருளல். திருக்குற்றாலம் ஸ்ரீகுற்றாலநாதர் பஞ்ச மூர்த்திகளுடன் ரதோத்சவம்.  

மார்கழி 21, ஜனவரி 6, திங்கள் : தசமி. சர்வ பீஷ்ம வைகுண்ட ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி, கிருத்திகை. காஞ்சி ஸ்ரீகச்சபேஸ்வரர் கொட்டா உற்சவம் (பொம்மலாட்டம்). சர்வ விஷ்ணுவாலயங்களிலும் பரமபத வாசல் திறப்பு விழா. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் முத்தங்கி சேவை. ஸ்ரீவைகுண்ட முக்கோடி ஏகாதசி.

மார்கழி 22, ஜனவரி 7, செவ்வாய் : ஏகாதசி. கிருத்திகை விரதம். திருப்பெருந்துறை ஸ்ரீமாணிக்கவாசகர் எல்லாம் வல்ல சித்தராய்க் காட்சி. இரவு வெள்ளிக் குதிரையில் சேவகனாய் காட்சி அருளல். நாச்சியார்கோவில் ஸ்ரீஎம்பெருமான் தெப்போத்ஸவம்.

மார்கழி 23, ஜனவரி 8, புதன்: துவாதசி. மகா பிரதோஷம். காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப்பெருமான். மதுரை ஸ்ரீகூடலழகர் தலங்களில் திருவாய்மொழித் திருநாள் உற்சவ சேவை.

மார்கழி 24, ஜனவரி 9, வியாழன்: திரயோதசி. சிதம்பரம் ஸ்ரீநடராஜ மூர்த்தி அபிஷேகம். சிவகாமி சுந்தரி ரதோத்ஸவம். இரவு இருவரும் ராஜசபை என்ற ஆயிரங்கால் மண்டபம் எழுந்தருளல்.  

மார்கழி 25, ஜனவரி 10, வெள்ளி: சதுர்த்தசி. பௌர்ணமி. திருவையாறு ஆட்கொண்டார் வடைமாலைக்காட்சி, அதிகாலையில் ஆருத்ரா தரிசனம், வடசாவித்ரி விரதம், சென்னை ஸ்ரீவடிவுடையம்மன் திருவுடையம்மன் கொடியிடையம்மன் தரிசனம் விசேஷம், சாரங்கபாணி கருடசேவை. திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் தாமிரசபா நடனம். திருவாலங்காடு ஸ்ரீசிவபெருமான் ரத்தின சபா நடனம்.

மார்கழி 26, ஜனவரி 11, சனி: பௌர்ணமி.  திருவொற்றியூர் அரைக்கட்டு உற்சவம், ஸ்ரீதியாகராஜர் திருநடனம். திருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை. திருமலை சடகோப ராமானுஜ பெரியஜீயர் சுவாமிகள் ஜெயந்தி, ஸ்ரீரமண மகரிஷி ஜயந்தி, திருவொற்றியூர் ஸ்ரீதியாராஜர் திருநடனம்.

மார்கழி 27, ஜனவரி 12, ஞாயிறு: பிரதமை. துவிதியை கூடாரவல்லி. திருவண்ணாமலை, திருவையாறு இத்தலங்களில் சிவபெருமான் புறப்பாடு.

மார்கழி 28, ஜனவரி 13, திங்கள்: திரிதியை. (சங்கடஹர) சதுர்த்தி. மதுரை ஸ்ரீகூடலழகர், திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமான் தலங்களில் ராப்பத்து உற்சவ சேவை. இன்று மாலை ஸ்ரீவிநாயகப் பெருமான் வழிபாடு நன்று.  

மார்கழி 29, ஜனவரி 14, செவ்வாய்: சதுர்த்தி விரதம்.  போகிப்பண்டிகை. குடந்தை ஸ்ரீசார்ங்கபாணி வெண்ணெய்த்தாழி சேவை. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாண வைபவம்.

- ந.பரணிகுமார்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

  • 27-02-2020

    27-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • thodar vanmurai20

    கலவர பூமியாக மாறிய தலைநகர்: வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரிப்பு...தொடர்ந்து 4வது நாளாக பதற்றம் நீடிப்பு!

  • brezil20

    பிரேசில் கார்னிவல் 2020: ஆடம்பரமான ஆடைகளில் ஆடல் பாடலுடன் மக்கள் கொண்டாட்டம்!

  • vimaanam20

    பாலகோட் ஏர் ஸ்ட்ரைக் நினைவு நாள்: சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் 2.0 க்கு பயன்படுத்தப்படும் மிராஜ் -2000 போர் ஜெட் விமானங்கள் காட்சிக்கு வைப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்