SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நம்புகிறவர் நற்பேறு பெறுவர்

2019-11-06@ 15:33:47

கிறிஸ்தவம் காட்டும் பாதை

தன் நாட்டுக்கு அருகில் இருந்த ஒரு தீவைக்கைப்பற்றத் திட்டமிட்டான் படைத்தலைவன். ஒரே ஒரு பாலம் தான் அந்தத் தீவை அவனுடைய சொந்த நாட்டுடன் இணைத்திருந்தது. தனது படையை இரவோடு இரவாக பாலத்தின் வழியாக நடத்திச்சென்றான். எல்லா வீரர்களும் தீவை அடைந்ததும் முதல் கட்டளை பிறப்பித்தான். இந்தப் பாலத்தை உடைத்து தகர்த்து விடுங்கள். கட்டளையைக் கேட்ட வீரர்கள் திகைத்தார்கள். இந்தப்பாலம் தான் நாம் தோற்றால் தப்புவதற்கு ஒரே வழி! இதைத்தானே நாம் முக்கியமாகப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். படைத்தலைவன் உறுதியாகச் சொன்னான்.

தோற்று ஓடிப்போவதற்காக நாம் இங்கே வரவில்லை. தோற்றால் திருப்பி ஓடிவிட வேறு வழி இருக்கிறது என்ற நினைப்பே நமக்கு வேண்டாம். வெற்றியோடுதான் நாம் நாடு திரும்புவோம். அப்போது வெற்றிப் பாலத்தைக் கட்டிக்கொள்வோம். ஆகையால் பாலத்தை இப்போது உடையுங்கள். பாலம் உடைக்கப்பட்டது. வெற்றி கிட்டியது. வெற்றிப் பாலம் மீண்டும் கட்டப்பட்டது. ‘‘ஞானம் தன் மக்களை மேன்மைப்படுத்தும். தன்னைத்தேடுவோருக்குத் துணை நிற்கும். ஞானத்திற்கு அன்பர் வாழ்விற்கும் அன்பர். அதனை வைகறையிலேயே தேடுவோர் மகிழ்ச்சியால் நிரம்புவர்.

அதனைப்பற்றிக் கொள்வோர் மாட்சிமையை உரிமையாக்கிக்கொள்வர். அது செல்லும் இடம் எல்லாம் ஆண்டவர் ஆசி வழங்குவார்.  ஞானத்துக்குப் பணிவோர் மக்களினங்களுக்குத் தீர்ப்பு வழங்குவர். அதற்கு செவி சாய்ப்போர் பாதுகாப்பாய் வாழ்வர். ஞானத்தை நம்புவோர் அதனை உரிமையாக்கிக் கொள்வர். அவர்களுடைய வழிமரபினர்களும் அதனை உடைமையாக்கிக்கொள்வர். முதலில் அவர்களை அது கோணல் வழியில் அழைத்துச்செல்லும். அவர்களுக்கு அச்ச நடுக்கத்தை வருவிக்கும். தனக்கு அவர்கள் மீது நம்பிக்கை ஏற்படும் வரை அவர்களை அது கண்டிக்கும், வதைக்கும்.

அவர்களுக்குத் தன் ரகசியங்களை வெளிப்படுத்தும். அதைவிட்டு அவர்கள் விலகிச்சென்றால் அவர்களை அது கைவிட்டு விடும். அழிவுக்கு அவர்களை இட்டுச்செல்லும். தக்க நேரம் பார். தீமையைக் குறித்து விழிப்பாய் இரு. உன்னைப்பற்றியே நாணம் அடையாதே. ஒருவகை நாணம் பாவத்திற்கு இட்டுச்செல்லும். மற்றொரு வகை நாணம் மாட்சியையும், அருளையும் தரும். பாகுபாடு காட்டி உனக்கே கேடு வருவித்துக்கொள்ளாதே. பணியின் பெயரால் வீழ்ச்சி அடையாதே. பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருந்து விடாதே.  

ஞானம் பேச்சில் புலப்படும். நற்பயிற்சி வாய் மொழியால் வெளிப்படும் உண்மைக்கு மாறாகப் பேசாதே. உன் அறியாமைக்காக நாணம் கொள்.’’ - (சீராக் 4: 1-25) போதனைக்கு செவி கொடுப்பவன் வாழ்வடைவான். ஆண்டவரை நம்புகிறவன் நற்பேறு பெறுவான். நாம் எப்பொழுது இறை வார்த்தைக்குச் செவி கொடுக்க ஆரம்பிக்கின்றோமோ அப்பொழுது இறைவன் நம்முடைய வாழ்வில் நிறைவாக நிரம்பி இருப்பார்.  துயரங்களில் இருந்து நம்மை விடுவித்து அமைதியான வாழ்க்கையை ஆண்டவர், நமக்குத் தருவார்.
   
‘‘மணவைப்பிரியன்’’
ஜெயதாஸ் பெர்னாண்டோ.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 07-12-2019

  07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • RioStarFerrisWheel

  பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

 • ambedh_day11

  இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

 • SydneyOrangeSky19

  ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

 • victoriafallsdry2019

  தென் ஆப்ரிக்காவில் நிலவும் வறட்சி: விக்டோரியா அருவியில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவில் குறைந்த தண்ணீர் வரத்து

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்