SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2019-11-02@ 09:10:00

நவம்பர் 2, சனி - திருச்செந்தூர் கந்த சஷ்டி சூரஸம்ஹாரம். சகல சுப்பிரமணிய தலங்களிலும் ஸ்கந்த சஷ்டி சூரஸம்ஹாரப் பெருவிழா. குமாரவயலூர் ஸ்ரீமுருகப்பெருமான் காலை சக்திவேல் வாங்குதல்.

நவம்பர் 3, ஞாயிறு - திருச்செந்தூர் தெய்வானை திருக்கல்யாணம். வள்ளியூர் ஸ்ரீமுருகப்பெருமான் காலை கோ ரதத்திலும் இரவு பல்லக்கு சேவை. திருக்கோஷ்டியூர் ஸ்ரீசௌமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவாரம்பம். வாலாஜா அனந்தலை தன்வந்த்ரி ஆரோக்யபீடத்தில் பாலா திரிபுரசுந்தரி பிரதிஷ்டை மஹோற்சவம்.

நவம்பர் 4, திங்கள்- பொய்கையாழ்வார், திருவோண விரதம். சிக்கல் சிங்காரவேலவர் வள்ளி, தெய்வானையை மணந்து இந்திர விமானத்தில் காட்சியருளல். பொய்கையாழ்வார் திருநட்சத்திரம்.

நவம்பர் 5, செவ்வாய் - பூதத்தாழ்வார், கோஷ்டாஷ்டமி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரிய பெருமாள் டோலோற்சவம். சிக்கல் ஸ்ரீசிங்காரவேலவர் விடாயாற்று உற்சவம். பூதத்தாழ்வார் திருநட்சத்திரம்.

நவம்பர் 6, புதன் - பேயாழ்வார். திருகோஷ்டியூர் ஸ்ரீசௌமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவம் சேவை. உத்தரமாயூரம் ஸ்ரீவள்ளலார் சந்நதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு. நல்லாத்தூர் வரதராஜப் பெருமாள் பவித்ரோற்சவம்.

நவம்பர் 7, வியாழன் - மாயவரம் மயூரநாதர் கடைமுக உற்சவ ஆரம்பம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் ரட்சாபந்தனம்.

நவம்பர் 8, வெள்ளி - சுக்லபட்ச சர்வ உத்தான ஏகாதசி. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீபிரகத்குஜாம்பிகை புறப்பாடு.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • award20

    பஞ்சாபைச் சேர்ந்த சன்னி இந்துஸ்தானி இனிமையான குரல் ஆடிஷனில் இந்தியன் ஐடல் 11ஐ வென்றார்!!

  • 24-02-2020

    24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2020

    23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • theepam2020

    மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்