SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நட்சத்திர பலன்கள்

2019-10-16@ 15:58:06

அசுவினி: ஆன்மிக வழியில் ஆர்வம் கூடும். அலுவலகப் பணியில் வீண்பழிகள் வரலாம். கூட்டுத் தொழில் விருத்தி அடையும். குருவை வழிபடவும்.

பரணி:  நண்பர்கள் வழியில் நன்மைகள் கூடும். குடும்ப உறவுகள் குதூகலம் கூட்டும். பெருமாளை வழிபடவும்.

கார்த்திகை: புதிய நட்பால் புன்னகை பூக்கலாம். மேலதிகாரிகளின் ஆதரவால் மேன்மை அடையலாம். உணவுக் கட்டுபாடு தேவை. சிவனை வழிபடவும்.

ரோகிணி:  ஆன்மிக சிந்தனை கூடும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். தொழில் லாபம் துணிவு கூட்டும். குருவை வழிபடவும்.

மிருகசீரிஷம்: முகவர்கள் முன்னேற்றம் காணும் மாதமிது. பழைய பாக்கிகள் வசூலாகும். சகோதர வழியில் உதவிகள் பெறலாம். அனுமனை வழிபடவும்.

திருவாதிரை: தாய் வழியில் உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். வண்டி வாகன யோகம் கூடும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். பைரவரை வழிபடவும்.

புணர்பூசம்: வியாபார லாபம் மந்தமாகும். புதிய தொழில் முயற்சிகளை தள்ளிப் போடவும். பயணங்கள் கூடும். சிவனை வழிபடவும்.

பூசம்: நெருப்பு, மின்சாரத்தில் கவனமுடன் செயல்படவும். யாருக்கும் ஜாமீன் ஏற்க வேண்டாம். போட்டி, பந்தயம் லாபம் தரும். துர்க்கை அம்மனை வழிபடவும்.

ஆயில்யம்: கூட்டுத்தொழில் முயற்சிகள் வெற்றி தரும். பொருளாதாரப் பிரச்சினை ஓரளவு சீராகும். வியாபார லாபம் பெருகும். அம்மனை வழிபடவும்.

மகம்: எதையும் யோசித்துச் செயல்பட வேண்டும். வண்டி வாகன பாரமரிப்பு அவசியம். மதுரை மடப்புரம் விலக்கு தெற்குமுக விசாலட்சி விநாயகருக்கு 7  தேங்காய் மாலை சாற்றி 108 முறை வலம் வரவும்.

பூரம்: மறைமுக வருமானம் குறையும். உடல்நிலை உபாதைகள் வரலாம். கணவன், மனைவி உறவு பலப்படும்.  மலைக்கோவில் வழிபாடு செய்து வரவும்.

உத்திரம்: புதிய பொருட் சேர்க்கை அமையும். கடன் சுமை குறையும். பெண்களுக்கு யோகம் தரும் மாதமிது. துர்க்கையை வழிபடவும்.

அஸ்தம்: அவசரத் தேவைகள் உடனே பூர்த்தியாகும். பஸ் பயணத்தில் பர்ஸ் பத்திரம். கூட்டுத் தொழில் தொடங்கலாம் சரஸ்வதியை வழிபடவும்.

சித்திரை: மாணவர்கள் முன்னேற்றம் கூடும். அரசியல் அனுபவம் ஆர்வம் கூட்டும். காதல் யோகம் கூடும். காளியை வழிபடவும்.

சுவாதி: மனதில் மகிழ்ச்சி கூடும். செல்போன் பேச்சுகள் திருப்தி கூட்டும். காதல் யோகம் கூடும். மாரியம்மனை வழிபடவும்.

விசாகம்: பிள்ளைகள் பெருமைகள் கூடும் மாதமிது. குடும்ப உறவுகள் சீராகும். சுபச் செலவு கள் கூடும். முருகனை வழிபடவும்.

அனுஷம்:  கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங் கள் பெறலாம். கட்டிட பணியாளர் கவலைகள் தீரும். உடல்நலன் பேணவும். பெருமாளை வழிபடவும்.

கேட்டை:  பண நெருக்கடி ஓரளவு சீராகும். குடும் பச் சூழல் குழப்பம் குறையும். அரசியல்வாதிகளின் அச்சம் அகலும். காளியை வழிபடவும்.

மூலம்: வரவுக்கு மேலே செலவுகள் கூடும் மாதமிது. வெளிநாட்டு முயற்சிகள் வெற்றி தரும். அனுமனை வழிபடவும்.

பூராடம்: மனதில் குழப்பம் குறையும். ரகசிய சிநேகிதங்கள் அம்பலம் ஆகலாம். விழிப்புடன் செயல்படவும். சக்கரத்தாழ்வாரை வழிபடவும்.

உத்திராடம்: பெரியோர், மகான்கள் ஆசிகள் கிட்டும். வியாபார லாபம் கூடும். பெண்களால் யோகம் உண்டு. முருகனை வழிபடவும்.

திருவோணம்:  விவாசாயிகள் உயர்வு பெறலாம். மாணவர் முன்னேற்றம் சீராகும். தொழில் லாபம் கூடும். நாக வழிபாடு செய்து வரவும்.

அவிட்டம்: வீடு, மனை புரோக்கர்கள் அலைச்சலை மட்டுமே சம்பாதிக்க முடியும். போட்டி, பந்தயம் லாபம் தரும். தெற்குமுக விசாலாட்சி விநாயகரை வழிபடவும்.

சதயம்: கலைஞர்களின் வருவாய் குறையும் மாதமிது, யாருக்கும் ஜாமீன் ஏற்க வேண்டாம். மறைமுக வழியில் வருமானம் கூடும். அனுமனை வழிபடவும்.

பூரட்டாதி: பிரிந்தவர்கள் ஒன்று சேரும் மாதமிது.  தொழிலில் போட்டி, பொறாமை கூடும். அரசியலில் செல்வாக்கு கூடும். அய்யப்பனை வழிபடவும்.

உத்திரட்டாதி: கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படலாம். புதிய தொழில் முயற்சிகள் அமையும். கணபதியை வழிபடவும்.

ரேவதி: வராத கடன்கள் வசூலாகும் மாதமிது. குடும்பத்தில் அமைதி கூடும். மாணவர்கள் கவனமுடன் படிக்கவும். சிவனை வழிபடவும்.

திருப்புவனம் - மடப்புரம் விலக்கு ஜோதிடர்
கரு.கருப்பையா, M.A.M.Phil.,B.Ed.,
போன்: 94431-65504
youtube: jothidar karukaruppiah

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்