SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆண்டவனின் அழகிய கட்டளைகள்..!

2019-10-05@ 14:42:39

இஸ்லாமிய வாழ்வியலின் அடிப்படைகளை வேதத்தின் ஓர் அத்தியாயத்தில் மூன்றே திருவசனங்களில் இறைவன் தெளிவாக அறிவித்து விட்டான்.  அந்த வசனம் வருமாறு: “(நபியே, இவர்களிடம்) கூறுங்கள்:
“வாருங்கள். உங்கள் இறைவன் உங்கள் மீது சுமத்தியுள்ள நிபந்தனைகள் எவை என்பதை நான் கூறுகிறேன்.
“அவனோடு யாரையும் எதையும் இணை வைக்காதீர்கள்.
“பெற்றோருடன் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள்.
“வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். நாமே உங்களுக்கு உணவளிக்கிறோம். அவர்களுக்கும் அளிப்போம்.
“மானக்கேடான செயல்களின் அருகில் கூடச் செல்லாதீர்கள். அவை வெளிப்படையானவையாயினும் மறைவானவையாயினும் சரியே.
“இறைவன் கண்ணியத்திற்குரியதாக்கிய எந்த உயிரையும் நியாயமின்றிக் கொலை செய்யாதீர்கள்.
“நீங்கள் சிந்தித்துச் செயல்படவேண்டும் என்பதற்காக இவற்றைக் கொண்டு இறைவன் உங்களுக்கு அறிவுறுத்துகிறான்.
“அநாதைகளின் செல்வத்தை - அவர்கள் பருவ வயதை அடையும்வரை- நியாயமான முறையிலன்றி நெருங்காதீர்கள்.
“அளவையிலும் நிறுவையிலும் நீதியைக் கடை பிடியுங்கள்.
“எந்த மனிதன் மீதும் அவனது சக்திக்கு ஏற்பவே தவிர நாம் பொறுப்பு சுமத்துவதில்லை.
“பேசும்போது நீதியுடன் பேசுங்கள். உங்கள் நெருங்கிய உறவினர் பற்றிய விவகாரமாயினும் சரியே.
“இறைவனின் உடன்படிக்கையை நீங்கள் முழுமையாக நிறைவேற்றுங்கள்.
“நீங்கள் அறிவுரை பெறவேண்டும் என்பதற்காக இவற்றைக் கொண்டு அவன் உங்களுக்கு நல்லுரை கூறுகின்றான்.
“மேலும் அவன் அறிவுறுத்துகிறான்- நிச்சயமாக இதுதான் என்னுடைய நேரான வழியாகும். எனவே நீங்கள் இதனைப் பின்பற்றுங்கள். வேறு  வழிகளைப் பின்பற்றாதீர்கள். ஏனெனில் அவை நேரான வழியிலிருந்து உங்களைச் சிதறடித்துவிடும்.
“உங்களுடைய இறைவன் உங்களுக்கு நல்கியுள்ள அறிவுரைகள் இவைதாம். இவற்றின் மூலம் நீங்கள் தவறான வழியைத் தவிர்த்து வாழக்கூடும்.”  (குர்ஆன் 6:151-153)
வேதத்தின் மூன்றே மூன்று வசனங்களில் சொல்லப்பட்டுள்ள இந்தக் கட்டளைகளை மனிதன் கடைப்பிடித்து வாழ்ந்தால் ஒரு தூய்மையான,  நேர்மையான சமுதாயம் மலர்ந்து மணம் வீசும்.
- சிராஜுல்ஹஸன்

இந்த வார சிந்தனை

“இந்த வேதத்தை நாம்தான் அருளினோம். இது மிக்க அருள்வளமுடையது. எனவே நீங்கள் இதனைப் பின்பற்றுங்கள்.” (குர்ஆன் 6:155)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-12-2019

  15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-12-2019

  14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • po13

  கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

 • wagle_hunttt

  கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

 • modi13

  நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்