பலன் தரும் ஸ்லோகம்
2019-10-04@ 17:09:25

(கொடிய துன்பங்கள் நீங்க, தேவியின் திருவருள் கிட்ட ஜெயதுர்க்கா ஸ்லோகம்)
த்யானம் ஸ்லோகம்
காலாப்ரபாம் கடாக்ஷைர ரிகுல பயதாம்
மௌளிபத்தேந்து ரேகாம்
சங்கம் சக்ரம் க்ருபாணம் த்ரிசிகமபி கரை
ருத்வ ஹந்தீம் த்ரிநேத்ராம்
ஸிம்ஹஸ்கந்தாதி ரூடாம் திரிபுவன மகிலம்
தேஜஸா பூரயந்தீம் - த்யாயேத் துர்க்காம்
ஜயாக்யாம் த்ரிதசபரிவ்ருதாம்
ஸேவிதாம் ஸித்திகாமைஹி
பொதுப்பொருள்: தேவர்கள் அனைவரும் கூடி துர்கா தேவியைத் துதித்து பேறு பெற்றனர். இத்தேவியின் மந்திரத்திற்கு பிரம்மதேவன் மஹரிஷியாகிறார். அன்னை சிம்மவாஹினியாக காட்சி தருகிறாள். சங்கு, சக்ரம், வாள், திரிசூலம் ஆகிய ஆயுதங்களோடு நான்கு கரங்களாலும் பக்தர்களைக் காத்தருள்கிறாள். அஷ்டமா சித்திகளையும் வேண்டும் பக்தர்களுக்கு அருளும் அன்னை இவள். இத்தேவியின் மந்திரம் ரக்ஷாகரமானது. இந்த மந்திர பாராயண பலனால் பக்தர்கள் தீவினைகள் நீங்கி இன்புறுகின்றனர். இத்தேவியின் மந்திரத்தில் துர்க்கே துர்க்கே என இருமுறை தேவியின் திருநாமம் வருவதால் எத்தகைய கொடிய துன்பங்களும் பக்தரை விட்டு எளிதில் நீங்கும். இத்தேவியின் அருள் கிட்டிட எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி கிட்டும். விதியை சரியாக்கும் அனுக்கிரகம் செய்யக்கூடிய வழிபாடும் கிடைக்கும். தேவி மஹாத்மியத்தின் 4ம் அத்தியாய பாராயண பலனைத் தருபவளும் இவளே.
Tags:
பலன் தரும் ஸ்லோகம்மேலும் செய்திகள்
பலன் தரும் ஸ்லோகம் (கார்த்திகை தீபம் ஏற்றிய பலன் கிட்ட)
பலன் தரும் ஸ்லோகம்
பலன் தரும் ஸ்லோகம்
கவித்திறன் அருளும் கலைமகள்
பலன் தரும் ஸ்லோகம்
பலன் தரும் ஸ்லோகம்(நவகிரக தோஷங்கள் நீங்க)
14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை
3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது