SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2019-09-27@ 15:33:13

செப்டம்பர் 28, சனி - அமாவாசை. சர்வ மஹாளய அமாவாசை, மாஷாகௌரிவிரதம், புரட்டாசி 2வது சனிக்கிழமை. வேளூர் எதிர்காட்சி, ராமேஸ்வரம்  வெள்ளி ரதம். சிருங்கேரி ஸ்ரீசாரதாம்பாள் மஹா அபிஷேகம்.

செப்டம்பர் 29, ஞாயிறு - பிரதமை. நவராத்திரி ஆரம்பம். வேளூர் சீர்காழி, திருக்கடையூர், திருப்பனந்தாள் திருவையாறு தலங்களில் ஸ்ரீ அம்பாளுக்கு லக்ஷார்ச்சனை ஆரம்பம், தருமை மஹாலட்சுமி துர்க்காம்பிகை சந்நதியில் சதசண்டியக்ஞம் ஆரம்பம். சர்வ ஆலயங்களில் நவராத்திரி  உற்சவ ஆரம்பம். மதுரை மீனாட்சியம்மன் கொலு மண்டபத்தில் ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்தில் கொலு தர்பார் காட்சி. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கொடியேற்றம்.

செப்டம்பர் 30, திங்கள் - துவிதியை. ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் திருஅவதார திருநட்சத்திரம். சந்திர தரிசனம். சுக்கிர ஜெயந்தி. சிருங்கேரி ஸ்ரீசாரதம்பாள்  மாகேஸ்வரி அலங்காரம்.

அக்டோபர் 1, செவ்வாய் - திருதியை. சுக்லபட்ச சதுர்த்தி. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சின்ன சேஷ வாகனத்திலும், இரவு ஹம்ஸ வாகனத்திலும்  பவனி வரும் காட்சி.    

அக்டோபர் 2, புதன் - சதுர்த்தி.  திருப்பதி ஏழுமலையப்பன் பகலில் சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப்பந்தல் அருளிய காட்சி.

அக்டோபர் 3, வியாழன் - பஞ்சமி. திருவஹிந்திரபுரம் சுவாமி தேசிகர் சிம்ம வாகனம். பாதூர் கருடன்.  சுக்லபட்ச சஷ்டி. கரூர் தான்தோன்றி கல்யாண  வேங்கடேசப்பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் திருவீதியுலா.

அக்டோபர் 4, வெள்ளி - சஷ்டி விரதம். தருமை ஸ்ரீமஹாலட்சுமி துர்க்காம்பிகை சந்நதியில் நவதீப பூஜை. வில்வ விருட்ச பூஜை. திருமலை திருப்பதி சென்னை பைராகிமடம் கருடசேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாஸப் பெருமாள் பவனி. தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ராஜாங்க சேவை. மாயாண்டி சுவாமிகள் குருபூஜை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • hailnewzealand

  நியூஸிலாந்தில் ஆலங்கட்டி மழை: ஒவ்வொன்றும் கோல்ஃப் பந்து அளவில் இருப்பதால் வீடுகள் சேதம்

 • petroliranprotest

  பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஈரான் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 106 பேர் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்

 • christmascele

  லண்டன், நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் களைகட்ட தொடங்கியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

 • ausfire2011

  ஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமடைந்துள்ள காட்டுத்தீ: பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் நிலங்கள் தீக்கரையானது!

 • goalmineexplodechina

  சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் 15 பேர் பலியான சோகம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்