SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எனக்குச் செவிகொடுங்கள்

2019-09-23@ 15:07:05

கிறிஸ்தவம் காட்டும் பாதை

‘‘நாம் கேட்பது கடவுளுடைய திருஉளத்திற்கேற்ப அமைந்திருப்பின் அவர் நமக்குச் செவிசாய்க்கிறார். இதுவே நாம் அவர்மீது கொண்டுள்ள உறுதியான நம்பிக்கை. நாம் எதைக்கேட்டாலும் அவர் நமக்குச் செவிகொடுக்கிறார் என்று நமக்குத் தெரியும். எனவே நாம் அவரிடம் கேட்டவற்றைப் பெறுவோம் என்றும் உறுதி நமக்கு உண்டு’’ -(I யோவான் 5: 14-15) அனாதைக் குழந்தைகளுக்கான விடுதியைநடத்தி வந்தவருக்கு அதை விரிவுபடுத்த நிதி தேவைப்பட்டது. அதற்காக ஒரு வங்கியில் கடன் கேட்டார். வங்கி அதிகாரி அவரை நேர்முகத்தேர்வுக்கு அழைத்திருந்தார். நேரில் சென்ற அவர் தனது திட்டத்தை விளக்கினார். வங்கி அதிகாரி இவர் உண்மையில் கருணை உள்ளம் கொண்டவர். தானா என்று அறியவிரும்பி அவரிடம் ஒரு கேள்வி கேட்டார். எனது கண்களில் இரண்டில் ஒன்று செயற்கையானது. அது எது என்று உங்களால் சொல்ல முடியுமா? விடுதியின் அமைப்பாளர் உடனே தயங்காமல் சொன்னார், உங்கள் வலதுகண் செயற்கையானது.

சரியாகச் சொன்னீர்கள், ஆமாம், இதை எப்படி சரியாகக் கண்டுபிடித்தீர்கள்? மிகவும் சுலபம், இயற்கையான கண்ணில்தான் நாம் கனிவை, அன்பைப் பார்க்க, உணர முடியும். என் குழந்தைகளின் சிரமத்தை உங்களிடம் நான் விளக்கும்போது உங்கள் இடதுகண் கலங்கியதைக் கவனித்தேன் என்றார். அவருக்கு உடனடியாக வங்கிக்கடன் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது என்பது சொல்லவும் வேண்டுமோ? உண்மையான கண்கள் எப்போதும் கனிவையும், அன்பையும் வெளிப்படுத்தும், வெளிப்படுத்தவும் வேண்டும்!

‘‘தாகமாய் இருப்பவர்களே! நீங்கள் அனைவரும் நீர் நிலைகளுக்கு வாருங்கள்; கையில் பணமில்லாதவர்களே நீங்களும் வாருங்கள். தானியத்தை வாங்கி உண்ணுங்கள். வாருங்கள், காசு பணமின்றித் திராட்சை ரசமும், பாலும் வாங்குங்கள். உணவாக இல்லாத ஒன்றிற்காக நீங்கள் ஏன் பணத்தைச் செலவிடுகின்றீர்கள்? நிறைவு தராத ஒன்றிற்காய் ஏன் உங்கள் உழைப்பை வீணாக்குகிறீர்கள்? எனக்குக் கவனமாய்ச் செவிகொடுங்கள். ‘நல்லுணவை உண்ணுங்கள்’ என்னிடம் வாருங்கள். அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள், நான் உங்களுடன் என்றுமுள ஓர் உடன்படிக்கையைச் செய்துகொள்வேன். தாவீதுக்கு நான் காட்டிய மாறாத பேரன்பை உங்களுக்கும் காட்டுவேன். நான் அவனை மக்களினங்களுக்குச் சாட்சியாகவும், வேற்றினங்களுக்கு தலைவராகவும், தளபதியாகவும் ஏற்படுத்தினேன்.

இதோ, நீ அறியாத பிற இனங்களை அழைப்பாய், உன் கடவுளாகிய ஆண்டவரை முன்னிட்டு உன்னை அறியாத பிற இனத்தார் உன்னிடம் ஓடிவருவர். ஏனெனில் அவர் உன்னை மேன்மைப்படுத்தியுள்ளார். ஆண்டவரைக் காண வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள். அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். கொடியவர் தன் வழிமுறைகளையும், தீயவர் தன் எண்ணங்களையும் விட்டு விடுவார்களாக. அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும். அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார். அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும். ஏனெனில் அவர் மன்னிப்பதில் தாராள
 மனத்தினர். என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள்  அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல என்கிறார் ஆயர்.’’ - (ஏசாயா 55: 1-8)
‘‘மனம் அமைதியுடன் இருந்தால்தான் இறைவனைக் காணலாம். மனமாகிய கடலில் ஆசைகளென்றும் காற்று இருக்கும் வரையில் இறைவனின் பிரதிபிம்பம் தோன்றாது. அப்படிப்பட்ட மனத்தில் இறை தரிசனம் எவ்வாறு கிட்டும்?’’
- ‘‘மணவைப்பிரியன்’’

ஜெயதாஸ் பெர்னாண்டோ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 12-11-2019

  12-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • americaship

  ஹைதியில் முகாமிட்டு அந்நாட்டு மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வரும் அமெரிக்க கடற்படை

 • traincrashtelungana

  தெலுங்கானாவில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: சிக்கனல் கோளாறால் ஏற்பட்ட விபரீதம்!

 • humanfacefish

  மனித முகம் கொண்ட வினோத மீன்: சீனாவில் உள்ள ஒரு ஏரியில் கண்டுபிடிப்பு...வைரலாகும் புகைப்படங்கள்

 • berlinwall

  ஜெர்மனியை இரண்டாக பிரித்த பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட 30ம் ஆண்டு தினம்: இசை நிகழ்ச்சியுடன் அனுசரிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்