குபேரனை எப்படி வழிபட்டால் செல்வம் பெருகும் தெரியுமா?
2019-09-18@ 10:51:41

செல்வம் என்பது இன்றைய வாழ்வில் மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. செல்வதை ஈட்டுவதற்காக மனிதர்கள் அள்ளும் பகலுமாக உழைக்கின்றனர். திருமகளின் பார்வையும் குபேரனின் அருளும் இருந்தால் ஒருவருக்கு செல்வம் குவிய ஆரமிக்கும். வாருங்கள் குபேரனை எப்படி வழிபட்டால் செல்வம் சேரும் என்று பார்ப்போம்.
* திருமகளான மகாலட்சுமிதான் செல்வத்துக்கு அதிபதி. குபேரன் செல்வத்தைப் பராமரிக்கும் பணியைத்தான் செய்கின்றார். ஆகையால் எப்போதும் குபேரன் படத்துடன் மகாலட்சுமியின் படத்தையும் சேர்த்தே வணங்க வேண்டும்.
* வியாபாரத்தில், நாம் மேற்கொண்டுள்ள தொழிலில் லாபம் கிடைக்கவேண்டுமானால், குபேரனுக்குப் பாலாபிஷேகம் செய்து சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
* திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் போது மறக்காமல் குபேரலிங்கத்தை வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.
* குபேரன் வடக்குத் திசைக்கு அதிபதி என்பதால்தான் வாழப் பிறந்தவனுக்கு வடக்கு என்ற பழமொழியே உருவாயிற்று.
* குபேரனுக்கு உரிய நாள் வியாழக்கிழமை. அதுவும் பூச நட்சத்திரத்துடன் கூடிய வியாழக்கிழமை ரொம்பவே விசேஷம். அந்த நாளில் குபேரனை வழிபட்டால், அளவற்ற செல்வங்களுக்கு அதிபதியாகும் பாக்கியம் கிடைக்கும்.
Tags:
குபேரன்மேலும் செய்திகள்
இருபத்தேழு வகையான விரத முறைமைகள்
மயில் வாகனன்
ஐயப்பன், ஐயனார் இவர்கள் இருவரும் ஒருவரா?
காக்கை வாகனம்
திருவண்ணாமலை
மகாலட்சுமியின் வாகனமாக ஏன் ஆந்தையை வைத்திருக்கிறார்கள்?
11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்
ஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு
கார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது