SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் : லட்சக்கணக்கானோர் திரண்டனர்

2019-09-09@ 13:59:38

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. லட்சணக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தமிழகத்தின் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோயில்களில் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலும் ஒன்று. கொன்னையூர் மஹாமுத்துமாரிமய்மன் ஆலயத்தில் விநாயகர், முத்துசுப்பிரமணியர், பனையடிகருப்பர், வீரபத்திரர், ஆங்சநேயர், நாகர் போன்ற சன்னதிகளுடன் மஹாமண்டபம் விமான கோபுரங்களை திருப்பணிகள் செய்து கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கோயில் முன் மிகப்பெரிய யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த 5ம்தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று (8ம் தேதி) காலை 9.50மணிக்கு கபிலர் மலை செல்வகபில சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் கும்பத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

விழாக் குழுத்தலைவர் முத்துக்கருப்பன் செட்டியார், செயலாளர் ராஜாஅம்பலகாரர், பொருளாளர் செல்வம் செட்டியார், கோயில் செயல்அலுவலர் வைரவன் மற்றும் நிர்வாகிகள், பூஜகர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாடு வீட்டுவசதிவாரியத் தலைவர் வைரமுத்து, திருமயம் எம்எல்ஏ ரகுபதி, எஸ்பி.செல்வராஜ், இந்து சமய அறநிலைத்துறை மண்டலஇணைஆணையர் சுதர்சன், உதவிஆணையர் பாலசுப்பிரமணியன், நிலவளவங்கித் தலைவர் பழனியாண்டி, முன்னாள் ஊராட்சித் தலைவர் மாரிமுத்து, அழகப்பன்அம்பலம், ஆதிகாலத்துஅலங்கார மாளிகை நிர்வாக இயக்குனர்கள் ஜெயபால், மணிகண்டன், துர்கா மருத்துவமனை தலைமை மருத்துவர் அழகேசன், விஎன்ஆர் கன்ஸ்ட்ரக்சன் நாகராஜன், கார்த்திஅன்கோ கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பொன்னமராவதி டிஎஸ்பி தமிழ்மாறன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் தியாகராஜன் முன்னிலையில் தீயணைப்பு துறையினர் மற்றும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கொப்பனாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு இன்னிசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அரசு போக்கு வரத்துக் கழக பொன்னமராவதி கிளை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.இதில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர். கோயிலைச் சுற்றி மக்கள் வௌ்ளம் கடல் போல காட்சியளித்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்