SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பழனி முருகன் சிலை கொடிய விஷக்கலவையால் செய்யப்பட்டதா ?

2019-09-09@ 10:33:09

தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்று பழனி. இந்த கோவிலில் உள்ள முருகனின் சிலை மிகவும் பழமையானது என்பது நாம் அறிந்ததே. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஒரு சிலையை இங்கு யார் செய்தார்? அந்த சிலை விஷக்கலவையால் செய்யப்பட்டதா? இப்படி பல தகவல்களை இந்த பதிவில் நாம் பார்ப்போம் வாருங்கள்.நவபாஷாணங்கள் எனப்படும் ஒன்பது வகை பாஷாணங்களை கட்டி இப்படி ஒரு அற்புத சிலையை அங்கு உருவாக்கினார் போகர் என்னும் சித்தர்.

வீரம், பூரம், ரஸம், ஜாதிலிங்கம், கந்தகம், கௌரிபாஷாணம், வெள்ளை பாஷாணம், மிருதார்சிங், சிலாஜித் ஆகியவைதான் அந்த ஒன்பது பொருட்கள். இவைதான் பிரதானம், இது போக மேலும் பல வஸ்துக்களையும், மூலிகைகளையும் கலந்து திரவ நிலைக் குழம்பைக் கெட்டிப்படுத்தி திடப்பொருளாக மாற்றும் வித்தை போகருக்குத் தெரிந்திருந்தது.

போகரின் தலைமையில் 81 சித்தர்கள் ஒன்று சேர்ந்து, 81 வகையான வஸ்துக்களைக் கலந்து 9 கலவைகளாக்கிய பிறகு இந்தப் பாஷாணக்கட்டு செய்யப்பட்டது. இந்தக் கலவைகளை 9 விதமான எரிபொருளைக் கொண்டு காய்ச்சி, 81 முறை வடிகட்டி சுத்தி செய்யப்பட்டதாக அவரது பாடல்களில் சொல்லப்பட்டுள்ளது. அந்த பாஷாணக் கலவையில் லிங்கம், செந்தூரம், பாதரசம், ரசகற்பூரம், வெடி உப்பு, பாறையுப்பு, சவுட்டுப்பு, வாலையுப்பு, எருக்கம்பால், கள்ளிப்பால், வெண்காரம், சங்குப்பொடி, கல்நார், பூநீர், கந்தகம், சிப்பி, பவளம், சுண்ணாம்பு, சாம்பிராணி, இரும்பு, வெள்ளீயம், அரிதாரம், குன்றிமணி போன்ற பல சாமான்களும் பயன்படுத்தப்பட்டன.

இந்த வகை பாஷாணங்களைக் கலந்து கலவையாகக் கட்டும் வரை அதைச் செய்பவர்கள் சுவாசிக்கக் கூடாது! ஏனெனில் அவை அத்தனையும் கொடிய விஷத்தன்மையானவை. அத்தனை பேரும் மூச்சை உள்ளடக்கி சில மணி நாழிகைகள் வரை சுவாசிக்காமல் இவ்வளவு பெரிய பணியை போகரின் வழிகாட்டுதல் மூலம் செவ்வனே செய்து முடித்தார்கள் என்பதை இப்போது நினைத்துப் பார்த்தாலும் மலைப்பாகவே இருக்கிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • plastic22

    பிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி

  • pink_kolkatta11

    இந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்

  • panta22

    சர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்

  • 22-11-2019

    22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • watervapormoon

    வியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்