SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சந்திரன்-ரேவதி நட்சத்திர தேவிக்கு சிவன், பார்வதி காட்சியளித்த காருகுடி கைலாசநாதர் கோயில்

2019-09-09@ 10:31:34

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா தாத்தயங்கார் பேட்டை அருகில் காருகுடியில் உள்ளது அருள்மிகு கைலாச நாதர் திருக்கோயில். மூலவர் கைலாசநாதர். தாயார் கருணாகர வல்லி. இத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

தல வரலாறு:   சந்திர பகவான், கடைசி நட்சத்திர தேவியான ரேவதியை மணந்தார். அவர்கள், சிவனையும், பார்வதியையும் தரிசிக்க விரும்பினர். இதையறிந்த அம்பிகை கருணை கொண்டு, இத்தலத்தில் சிவனுடன் காட்சி கொடுத்தாள். சிவனுக்கு கைலாசநாதர் என்றும், அம்பாளுக்கு கருணாகரவல்லி என்றும் பெயர் ஏற்பட்டது. கார் எனப்படும் ஏழுவகை மேகங்களும் ரேவதி நட்சத்திர நாளில் இங்கு வழிபாடு செய்கின்றன.
சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன் கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரி என்ற மன்னன்  இக்கோயிலை புதுப்பித்து கட்டியுள்ளான். 1266ம் ஆண்டில் கர்நாடக  மன்னன்போசல வீரராமநாதன் என்பவன் இக்கோயில் பூஜைகள் தடையின்றி நடக்க நிறைய  நிலங்களை தானம் செய்துள்ளான். இக்கோயிலுக்காக  ராமசக்கவர்த்தி எனும் மன்னன் நில தானம் செய்துள்ளான்.  காசிக்கு அடுத்த  காருகுடி என்பார்கள். இத்தலத்தின் கீழ் அசோக நட்சத்திரம் சுற்றுகிறது.

ரேவதி நட்சத்திர பலன்: சந்திரனுக்கும் 27 நட்சத்திர தேவியருக்கும் சிவனும் ,பார்வதியும் இத்தலத்தில் காட்சி கொடுத்தனர். இறைவனின் கருணையை எண்ணி ரேவதி மட்டும் தினமும் இங்கு வந்து பூஜை செய்வதாக கூறப்படுகிறது. எனவே ரேவதி என்ற பெயருடையவர்கள், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு வந்து 27 என்ற எண்ணிக்கை வரும்படியான பொருட்களை சிவனிடமும் அம்மனிடமும் சமர்ப்பித்து, கோயிலுக்கு வருபவர்களுக்கு கொடுத்தால் தடை பட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடக்கும். ரேவதி நட்சத்திரம் முடிந்து, அஸ்வினி நட்சத்திரம் தொடங்கும் முன்பாக உள்ள 12 நிமிடங்களின் போது சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.  மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் திருவாதிரையன்றும், ரேவதி நட்சத்திரத்தன்றும்  இங்கு வருண பகவானுக்கு ஹோமம் செய்தால், மழை பெய்யும். சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் பாவங்கள் விலகும்,  நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. ரேவதி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். நீர் சம்பந்தமான நோய்கள், கண்சம்பந்தப்பட்ட நோய்கள், நாள்பட்ட நோய்கள் குணமாக இங்கு சிறப்பு அர்சசனை செய்யப்படுகிறது.    

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-09-2019

  17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • dragan_canadaa

  கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

 • gurgaun_cameraa1

  குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

 • apayin_kuppai11

  ஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்

 • protest_dailymail111

  சீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்