SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்யாண வரம் அருள்வார் காட்கரையப்பன்

2019-09-07@ 15:56:04

திருக்காட்கரை, எர்ணாகுளம், கொச்சி

மகாபலி என்ற மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். தானம், தருமங்கள் செய்வதில் சிறந்து விளங்கிய இந்த மன்னன் ஒருமுறை வேள்வி செய்யும்போது திருமால் வாமணனாக(குள்ள உருவில்) உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் தருகிறேன் என்றுகூறினான். உடனே வாமண உருவில் வந்த பகவான் ஒரு அடியால் இந்தப் பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்து மூன்றாவது அடிக்காக இடம் கேட்க, மகாபலி தனது தலையையே கொடுத்தான். அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி அவன் தலையில் கால் வைத்து அவனைப் பாதாள உலகிற்கு தள்ளினார்

திருமால். தான் நாட்டுமக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் வருடம் ஒருமுறை பாதாளத்திலிருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களைக் கண்டு மகிழும் வரம் வேண்டினான் மன்னன். திருமாலும் வரம் அளித்தார். அதன்படி, ஒவ்வொரு திருவோணத் திருநாள் அன்று மகாபலி பாதாள உலகிலிருந்து பூலோகத்திற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாகக் கேரள மக்கள் நம்புகிறார்கள் இதனை நினைவு கூர்ந்து, மகாபலியை வரவேற்கும் வகையில் ஓணம் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

திருக்காட்கரை காட்கரையப்பன் கோயில், மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து நிலத்தில் மகாபலியை அழுத்தி அழித்த தலம். இத்தலம் 108 திவ்ய
தேசங்களில் 68வது திவ்ய தேசமாகும்.கேரள பாணியில் வட்ட வடிவில் ஓடு வேய்ந்த கோயிலாகும். மூலஸ் தானத்தில் வாமன மூர்த்தி அருட் பாலிக்கிறார். கோயிலுக்கு வெளியே தனி சந்நதியில் பகவதி, சாஸ்தா, கோபால கிருஷ்ணன், நாகர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.இக்கோயிலில் வாமனருக்கு ஒரு கருவறையும், சிவபெருமானுக்கு ஒரு கருவறையும் தனித்தனியே உள்ளனர். சிவபெருமான் கருவறையில் மகாபலி வழிபட்டசிவலிங்கம் உள்ளது.

- ந.பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-09-2019

  17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • dragan_canadaa

  கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

 • gurgaun_cameraa1

  குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

 • apayin_kuppai11

  ஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்

 • protest_dailymail111

  சீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்