SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வளமை கொண்ட வசந்த காலத்தைப்பற்றி தெரியுமா ?

2019-09-05@ 15:56:02

சித்திரை, வைகாசி ஆகிய இரண்டு மாதங்கள் அடங்கிய காலம், வசந்த காலம் என்றும் இளவேனில் காலம் என்றும்  அழைக்கப்படுகிறது.வசந்தம் என்ற வடமொழிச் சொல், இனிமை, வளமை மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கும். செடி, கொடிகளெல்லாம் வளமையுடன்  பூத்திருக்கும் காலமாகவும், மக்கள் மகிழ்ந்திருக்கும் காலமாகவும் திகழ்வதால், வசந்த காலம் என்று சித்திரை, வைகாசி காலத்தைக் குறிப்பிடுகிறார்கள்.

இக்கருத்தை வால்மீகி ராமாயணத்தில் வால்மீகி பகவான் ஒரு ஸ்லோகத்தில் கூறுகிறார்.

“சைத்ர: ஸ்ரீமான் அயம் மாஸ: புண்ய: புஷ்பிதகானன:”
சித்திரை மாதமும் திருமாலும் ஒன்று.

ஏனெனில்,

* மாதங்களுக்கு ஆதி சித்திரை. அனைத்துலகுக்கும் ஆதிமூலம் திருமால்.
* சித்திரை மாதம் ஸ்ரீயோடு வளமையோடு கூடியிருக்கிறது. திருமாலும் ஸ்ரீயோடு திருமகளோடு கூடியிருக்கிறார்.
* சித்திரை மாதத்தில் செய்யும் நற்செயல்கள் நமக்குத் தூய்மையைத் தருகின்றன. அவ்வாறே திருமாலும் நம்மைத் தூய்மைப் படுத்துகிறார்.
* சித்திரை மாதத்தில் செடிகளில் பூ பூத்திருக்கும். அது செடிகளின் தலையில் மகுடம் வைத்தாற்போல் இருக்கும்.

எனவே சித்திரை மாதத்தை முடிசூடும் மாதம் என்றே சொல்லலாம். அதுபோலத்தான் திருமாலும் எப்போதும் தலையில் கிரீடத்தோடு  திகழ்கிறார்.இத்தகைய ஒற்றுமைகள் இருப்பதால் சித்திரை மாதமும் திருமாலும் ஒன்று என்று வால்மீகி கூறுகிறார். தமிழில் இளவேனில் காலம்  என்று சித்திரை, வைகாசி மாதங்கள் குறிப்பிடப்படுகின்றன. வேனில் என்றால் வெயில் என்று பொருள். மழை, பனி, குளிர் உள்ளிட்டவை எல்லாம்  விலகி, சூரியன் வெளிவரும் காலமான படியால், இது இளவேனில் காலம் என்றழைக்கப்படுகிறது. வெயில் அதிகமாக இருக்கும் காலமாக வசந்த  காலம் இருப்பதால், வசந்த காலத்தில் மாலை வேளையில் மன்னர்கள் சோலையில் இளைப்பாறுவார்கள்.

இந்த வசந்த காலத்தில் பல்வேறு திருத்தலங்களில் வசந்த உற்சவங்கள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன. பொதுவாக அனைத்து  திருக்கோயில்களிலுமே வசந்த மண்டபம் இருப்பதை நாம் கண்டிருப்போம். அம்மண்டபத்தைச் சுற்றி அழகிய தோட்டங்களும், பொய்கைகளும்  இருப்பதைக் காணலாம். சோலைகளில் இளைப்பாறும் காலமான வசந்த காலத்தில், மாலை நேரத்தில், வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளி இறைவன்  இளைப்பாறுகிறார்.

- ஸ்ரீநிவாசன்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-09-2019

    17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • dragan_canadaa

    கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

  • gurgaun_cameraa1

    குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

  • apayin_kuppai11

    ஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்

  • protest_dailymail111

    சீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்