SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீனாட்சி அம்மன் ஆவணி மூலத் திருவிழா : உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடல்

2019-09-05@ 14:31:11

மதுரை, -மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடல் நடந்தது.மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவில் திருவிளையாடல் நிகழ்வுகளே பிரதானமாகும். நேற்று தருமிக்குப் பொற்கிழி அளித்த திருவிளையாடல் நடந்தது. இன்று காலை 10 மணிக்கு கோயில் கருப்பண பிள்ளை மண்டபத்தில் உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடல் நடந்தது.

இந்த திருவிளையாடல் குறித்த வரலாற்றினை மீனாட்சி கோயில் பட்டர்கள் கூறுகையில், ‘‘அடியார்க்கு நல்லார் என்ற ஓர் அடியார் மதுரையில் தினமும் சிவனடியார்களுக்கு உணவளித்த பிறகே உண்பது என்ற கொள்கை உடையவராக இருந்தார். அவரது செல்வம் வற்றிய போதும் கடன் பெற்றாவது தனது கடமையை ஆற்றி வந்தார். கடனும் கிடைக்காத நிலையில் அவர் தனது மனைவியுடன் சோமசுந்தரரைத் தரிசித்துப் பின் உயிர் நீப்பதென்று எண்ணி கோயிலுக்குச் சென்றார்.

அவரது தருமநெறியின் உண்மை நிலை கண்ட இறைவன் அசரீரியாகத் தோன்றி ‘வீட்டிற்குச் செல்! அங்கே உனக்காக அள்ள அள்ளக் குறையாத நெல்மணிகளைக் கொண்ட உலாவாக்கோட்டை ஒன்றை அளித்துள்ளேன்’ என்றார்.அதன்படியே இருவரும் வீடு திரும்பி உலவாக்கோட்டை மூலம் கிடைத்த நெல்மணிகளைக் கொண்டு கடைசி காலம் வரை சிவனடியார்க்கு உணவளித்து வாழ்ந்தனர்’ என்றனர்.இரவு 7 மணிக்கு அம்மன் யாளி வாகனத்திலும், சுவாமி மற்றும் பிரியாவிடை நந்திகேசுவரர் வாகனத்தில் எழுந்தருளினர். இவர்கள் வடக்கு, கீழ ஆவணி மூல வீதிகள் வழியாக கோயிலில் எழுந்தருளினர். திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கோயில் பகுதியில் திரண்டிருந்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்