SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவேரிப்பாக்கம் அருகே மகாசக்தி அன்னியம்மன் கோயில் தேர் திருவிழா

2019-09-05@ 14:22:08

காவேரிப்பாக்கம், : காவேரிப்பாக்கம் அடுத்த சேரிஐயம்பேட்டை கிராமத்தில் மகாசக்தி அன்னியம்மன் கோயிலில் ஆவணி மாத தேர் திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கியது. 9ம் நாளான நேற்று தேர் திருவிழா நடந்தது. இதையொட்டி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து முன்னாள் ஊராட்சி தலைவர் அரிதாஸ் தேரை வடம்பிடித்து இழுத்து விழாவை தொடங்கி வைத்தார். அப்போது விரதமிருந்த பக்தர்கள் தொடர்ந்து தேரை இழுத்துச் சென்றனர்.

மாலை சேரிஐயம்பேட்டை பகுதியில்  இருந்து  உப்பரந்தாங்கல் கிராமம் வரை பக்தர்கள் எல்லை ஓடும்  நிகழ்ச்சி நடந்தது. பின்னர், விரதமிருந்த பக்தர்கள் முதுகில் அலகு குத்தியும், அந்தரத்தில் தொங்கியும், அம்மனுக்கு மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில், சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு வாண வேடிக்கை, நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  இவ்விழாவின் இறுதி நாளான நாளை மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.

மேலும், தேர் திருவிழாவை முன்னிட்டு சுமார் ₹7 லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர் உருவாக்கப்பட்டது. இந்தத் தேரில் மகா சக்தி அன்னியம்மன் வீதி உலா வரும்போது பக்தர்கள் சுவாமி மீது மிளகு  வாரி இரைத்தால்  மனித உடம்பில் உள்ள மருக்கள் நீங்கிவிடும் என்பது பக்தர்களின் ஐதீகமாக  இருந்து வருகின்றன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்