SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆரணி அடுத்த இரும்பேடு கிராமத்தில் ஏரிக்கரை பொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம் : திரளான பக்தர்கள் வழிபாடு

2019-09-05@ 14:21:25

ஆரணி, :ஆரணி அடுத்த இரும்பேடு கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் 50 ஆண்டு பழமையான பொன்னியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் புதுப்பிக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.  பணிகள் முடிந்ததையொட்டி நேற்று கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, அம்மனுக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லஷ்மி ஹோமம், கோ பூஜை, சயனாதி வாசகம், பூர்ணாஹூதி, அங்குரார்ப்பணம், கும்பாலங்காரம், கலாகர்ஷணம்,  முதல்கால யாகபூஜை, யாத்ராதானம், கலசம் புறப்பாடு, மஹா தீபாராதனை ஆகிய பூஜைகள் நடந்தது.

பின்னர், புனிதநீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக கொண்டு வந்து, கோயில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஆரணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, பொதுமக்கள் அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டனர். அப்போது பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர், இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில், அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் இரும்பேடு கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து கோயிலை அடைந்தது. முன்னதாக, ஆரணி ஜோதிட திலகம் சிவஸ்ரீ குமரேசன் சுவாமி தரிசனம் செய்தார்.இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுத்தவைர் சண்முகசுந்தரம், விழாக்குழு உறுப்பினர்கள் ரமேஷ்பாபு, குபேந்திரன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 13-11-2019

    13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • vagaidamflood

    பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது!

  • bangladeshtrain

    வங்கதேசத்தில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 16 பேர் பலியான சோகம்!

  • wildfireaus

    காட்டுத்தீ காரணமாக அபாய நிலையை எட்டியுள்ள ஆஸ்திரேலியா: பேரழிவு காரணமாக அவசரநிலை பிரகடனம்

  • hongkongprofire

    ஹாங்காங் போராட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்: வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபருக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்