SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மணப்பாடு திருச்சிலுவை நாதர் திருத்தல 440வது மகிமை பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

2019-09-05@ 14:20:39

உடன்குடி: மணப்பாடு திருச்சிலுவை நாதர் திருத்தல 440வது மகிமைப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.உடன்குடி அருகேயுள்ள மணப்பாடு கிராமத்தில் இயற்கை எழில் சூழ்ந்த கடற்கரையோரம் அழகிய மணல் குன்றின் மேல் அமைந்துள்ளது திருச்சிலுவை நாதர் திருத்தலம். பிரசித்தி பெற்ற இத்தலத்தில் ஆண்டுதோறும் 11 நாட்கள் நடைபெறும் மகிமைப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு பங்கு ஆலயத்தில் திருப்பலியும், 6.30 மணிக்கு திருச்சிலுவை நாதர் திருத்தலத்தில் அருட்தந்தை சகாயம் தலைமையில் திருப்பலி, மெய்யான திருச்சிலுவை ஆசீரும், தொடர்ந்து 8 மணிக்கு கொடியேற்றமும் நடந்தது. இதில் திருத்தல ஆன்மீக தந்தை தெயோபிலஸ், தூய ஆவி ஆலய பங்குதந்தை மனோ, சகாயராயன், பிரதீஷ், சில்வஸ்டர், இன்பென்ட், அம்புரோஸ், பிரான்சிஸ், பிளேவியன் யாகப்பர் ஆலய பங்குதந்தை லெரின் டிரோஸ், துணை பங்குதந்தை பிரபு உட்பட    ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

விழா நாட்களில் தினமும் காலையில் திருச்சிலுவை ஆலயம், பங்கு ஆலயத்தில் திருப்பலி, திருயாத்திரை திருப்பலி, மாலையில் பங்கு ஆலயத்தில் ஜெபமாலை, நற்கருணை ஆசீர், மறையுரை நடைபெறும். இதில் பல்வேறு பள்ளிகள், சபையினர் பங்கேற்பர். 13ம்தேதி காலை 6.30 மணிக்கு மணப்பாடு மக்கள், திருப்பயணிகள் திருப்பலிக்குப் பின் திவ்ய ஐந்து திருக்காய சபையின் பொறுப்பாளர்கள் தேர்வு, மாலை 4.30 மணிக்கு திருச்சிலுவை திருத்தலத்தில் மலையாளத்தில் திருப்பலியும், இரவு 7 மணிக்கு திருச்சி மறை மாவட்ட முன்னாள் ஆயர் அந்தோணி டிவோட்டா தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது.

பாளை மறை மாவட்ட முன்னாள் முதன்மை குரு சேவியர் டெரன்ஸ் மறையுரை வழங்குகிறார்.14ம் தேதி காலை 4மணிக்கு பங்கு மற்றும் திருச்சிலுவை நாதர் திருத்தலத்தில் திருப்பலியும், 5 மணிக்கு மலையாளத்தில் திருப்பலியும், 6 மணிக்கு ஐந்து திருக்காய சபையினர் பவனி, 11 மணிக்கு திருச்சிலுவை திருத்தலத்தில் திருப்பலியும், மாலை 4.30 மணிக்கு பங்கு ஆலயத்தில் நற்கருணை ஆசீர், மெய்யான திருச்சிலுவை முத்தமிடல், 5.30 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது.ஏற்பாடுகளை பங்குதந்தை லெரின் டிரோஸ், உதவி பங்குதந்தை பிரபு, திருத்தல ஆன்மீக தந்தை தெயோபிலஸ் மற்றும் அருட்சகோதரிகள், புனித யாகப்பர் ஆலய நலக்குழுவினர் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்