SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுசீந்திரம் கோயில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

2019-09-05@ 14:19:54

சுசீந்திரம், : சுசீந்திரம்   தாணுமாலயசுவாமி கோயில் திருவேங்கடவிண்ணவபெருமாளுக்கு ஆண்டுதோறும் ஆவணி மாதம் 10 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு ஆவணி திருவிழா நேற்று (4ம் தேதி) தொடங்கியது. 13ம் தேதி வரை விழா நடக்கிறது.முதல் நாளான நேற்று காலை  கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது தொடர்ந்து 7.45 மணியளவில் திருவேங்கடவிண்ணவ
பெருமாள் கோயில் எதிரே உள்ள கொடி மரத்தில் பூஜைகள் செய்து கொடியேற்றப்பட்டது. மாத்தூர் மட தந்திரி சங்கரநாராயணரு பூஜைகள் செய்து கொடியேற்றினார். இதில் ஏராளமான பக்தர்கள்  பங்கேற்றனர். தொடர்ந்து காலை பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி  அலங்கரிக்கப்பட்ட  வாகனத்தில் வைக்கப்பட்டு ரதவீதியை சுற்றி வரும் நிகழ்ச்சி நடந்தது.

விழா நாட்களில் தினமும் காலை, மாலை ரதவீதி சுற்றி சுவாமிகள் பவனி வருதல் மற்றும் ஸ்ரீபூதபலி பூஜை நடக்கிறது.  9ம் திருவிழாவான  12ம் தேதி மாலை 5  மணியளவில் அலங்கரிக்கப்பட்ட சர்ப்ப தேரில் பெருமாள், ஸ்ரீதேவி,  பூதேவி ஆகியோரை வைத்து ரதவீதியை சுற்றி வரும் தேரோட்டம் நடக்கிறது. 10ம்  திருவிழாவான்று திருஆறாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள்  கலந்துகொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோயில்களின் இணை  ஆணையர் அன்புமணி, கோயில் கண்காணிப்பாளர்  ஜீவானந்தம், மேலாளர் சண்முகம்பிள்ளை மற்றும் தாணுமாலயசுவாமி பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்