SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்புத்தூர் ஸ்ரீ பூமாயி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி மகா நவசண்டி யாகம்

2019-09-05@ 14:19:21

திருப்புத்தூர்: திருப்புத்தூர் ஸ்ரீபூமாயி அம்மன் கோயிலில், உலக மக்கள் நன்மை வேண்டி இரண்டு நாட்கள் மகா நவசண்டி யாக பூஜை நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை மங்கள அனுக்ஞை, ஸ்ரீவிநாயகர் பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. மாலை ஸ்ரீவிநாயகர் பூஜை, தீப லெட்சுமி பூஜை, சங்க பூஜை, அம்பாள் ஆவாஹானம், நவாக்ஷர் ஹோமம் நடைபெற்றது. இரவு பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. நேற்று காலை ஸ்ரீவிநாயகர் பூஜை, கோ பூஜை, பிரம்மச்சாரி பூஜை, சுமங்கலி பூஜை, கன்னிகா பூஜை, அம்பாள் ஆவாஹானம், தேவி மஹாத்மிய பாராயணம், நவசண்டி ஹோமம் நடைபெற்றது.

தொடர்ந்து வஸ்த்ராகுதி, மகாபூர்ணாகுதி தீபாரானை நடைபெற்றது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் ஸ்ரீ பூமாயி அம்பாளுக்கு யாகத்தில் வைக்கப்பட்டிருந்த கும்பத்தில் உள்ள புனிதநீரால் மகா அபிஷேகம், தீபாரானை நடைபெறும். ஸ்ரீபூமாயி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் நடைபெற்றது. மாலை நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஸ்ரீ பூமாயி அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • watervapormoon

    வியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா!

  • kuwaitcamelRace

    குவைத்தில் ஒட்டகங்களுக்கான ஓட்டப்பந்தயம்: ரோபோ ஜாக்கி மூலம் ஒட்டகங்கள் போட்டியிட்டன ..புகைப்படங்கள்!

  • amazonTraders

    Amazon, Flipkart- க்கு எதிராக டெல்லியில் நேற்று போராட்டத்தில் குதித்த அகில இந்திய வணிகர்கள் சங்கம்!

  • dubaiairshow2019

    துபாயில் வெகு விமர்சையாக நடைபெற்ற விமான கண்காட்சி: கண்கவர் சாகசங்களை செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீரர்கள்!

  • LAautoshow

    லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆட்டோ ஷோ: பார்வையாளர்களை அரசவைத்த BMW, Mercedes கார்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்