SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடியாத்தம் அருகே மீனூர் மலை பெருமாள் மீது சூரியஒளி : திரளான பக்தர்கள் தரிசனம்

2019-09-05@ 14:18:46

குடியாத்தம், : குடியாத்தம் அருகே மீனூர் மலையில் உள்ள பெருமாள் மீது நேற்று சூரியஒளி விழுந்தது. இதை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். குடியாத்தம் அடுத்த மீனூர் கிராமத்தில் உள்ள மலைமீது ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு 10 அடி உயரமுள்ள வெங்கடேச பெருமாள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது இதன் தனிசிறப்பாகும். மேலும், இங்குள்ள பெருமாளை தரிசனம் செய்தால் திருப்பதியில் உள்ள பெருமாளை தரிசனம் செய்வதற்கு இணையானது என்று பக்தர்களின் நம்பிக்கை.

இந்நிலையில், ஆண்டுதோறும் இங்கு ஆவணி மாதம் சூரியன் அஸ்தமனமாகும் போது அதன்கதிர்கள் பெருமாளின் மீது படுவது வழக்கம்.
மேலும், சூரிய ஒளி பெருமாளின் மீது படும்போது வழிபட்டால் கடன் தீரும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.அதன்படி நேற்று மாலை சூரியன் அஸ்தமன நேரத்தில் சூரியனின் கதிர் வீச்சு பெருமாளின் மீது விழுந்தது. இதை ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று முழங்கி பக்தி பரவசமுடன் தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • watervapormoon

    வியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா!

  • kuwaitcamelRace

    குவைத்தில் ஒட்டகங்களுக்கான ஓட்டப்பந்தயம்: ரோபோ ஜாக்கி மூலம் ஒட்டகங்கள் போட்டியிட்டன ..புகைப்படங்கள்!

  • amazonTraders

    Amazon, Flipkart- க்கு எதிராக டெல்லியில் நேற்று போராட்டத்தில் குதித்த அகில இந்திய வணிகர்கள் சங்கம்!

  • dubaiairshow2019

    துபாயில் வெகு விமர்சையாக நடைபெற்ற விமான கண்காட்சி: கண்கவர் சாகசங்களை செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீரர்கள்!

  • LAautoshow

    லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆட்டோ ஷோ: பார்வையாளர்களை அரசவைத்த BMW, Mercedes கார்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்