SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் 48வது பிரம்மோற்சவ விழா

2019-09-05@ 14:18:19

புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகரில் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த 2ம் தேதி வேதபாராயண திவ்ய பிரபந்த சேவையுடன் பிரம்மோற்சவ விழா துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நாளை (6ம் தேதி) காலை 6 மணிக்கு சுதர்சன ஹோமமும், இரவில் கருட சேவையில் சாமி வீதியுலாவும் நடக்கிறது. தொடர்ந்து, 7ம் தேதி காலை ராம காயத்ரி ஹோமமும், இரவில் ஹனுமந்த வாகனத்தில் சாமி வீதியுலாவும், 8ம் தேதி காலை சுதர்சன ஹோமமும், இரவில் யானை வாகனத்தில் சாமி வீதியுலாவும், 9ம் தேதி காலை புருஷசுக்த ஹோமமும், இரவில் சூர்ணோத்ஸவம் கோதரத்தில் சாமி வீதியுலாவும், 10ம் தேதி காலை ந்ருஸிம்ம ஹோமமும், இரவில் ஹம்ஸ வாகனத்தில் சாமி வீதியுலாவும் நடக்கிறது.

முக்கிய நிகழ்வாக, 11ம் தேதி காலை 9 மணிக்கு ஹயக்ரீவ ஜெயந்தி, தேரோட்டம் மற்றும் தீர்த்தவாரி நடக்கிறது. இதைத் தொடர்ந்து, 12ம் தேதி இரவு திருக்கல்யாணத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. தினமும் இரவு சாற்றுமுறைக்கு பிறகு டோலோற்சவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை லட்சுமி ஹயக்ரீவ பெருமாள் பக்த ஜன சபையர், கோயில் சிறப்பு அதிகாரி மற்றும் லட்சுமி சரஸ் மாருதி டிரஸ்ட் ஆகியோர் செய்துள்ளனர்.    

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்