SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

2019-09-05@ 14:17:51

திண்டுக்கல், : திண்டுக்கல் அனுமந்தநகரில் உள்ள காளியம்மன், பகவதியம்மன், சிவசக்தி விநாயகர், கோட்டை முனியப்பன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.முன்னதாக கடந்த 2ம் தேதி காலை முதற்கால அனுக்ஞை அனுமதி பெறுதல், விக்னேஸ்வர பூஜை, பஞ்ச காவ்யம், மஹா கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து 3ம் தேதி இரண்டாம் கால பூஜைகளான விக்னேஸ்வர பூஜை, புண்யாஹ வாசகம், மஹா பூர்ணாஹீதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து மதியம் மூன்றாம் கால பூஜைகளான ஸ்ரீ சக்ர பூஜை, வஸ்திரஹீதி, தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. இரவு எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடைபெற்றது.

நேற்று காலை 6.30 மணிக்கு நான்காம் கால பூஜைகளான விக்னேஸ்வர பூஜை, நாடி சந்தானம், திரவியாஹீதி, யாத்ராதானம் நடைபெற்றது. 9 மணிக்கு புனித நீர்க்குட யாத்திரை அனுமதி பெற்று கலசம் கோயிலை சுற்றி வந்தது. பின்னர் 9.20 மணிக்கு விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து மூலஸ்தான மஹா கும்பாபிஷேகம், சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்திற்கான ஏற்பாட்டினை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத்ராஜன் செய்திருந்தார். விழா ஏற்பாட்டினை ஊர் நாட்டாமை சரவணன், ஊர் மணியக்காரர் மோகன்ராஜ், ஆலய திருப்பணிக்குழு தலைவர் சின்ராஜ், செயலாளர் நமச்சிவாயம், பொருளாளர் லோகேஷ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • watervapormoon

    வியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா!

  • kuwaitcamelRace

    குவைத்தில் ஒட்டகங்களுக்கான ஓட்டப்பந்தயம்: ரோபோ ஜாக்கி மூலம் ஒட்டகங்கள் போட்டியிட்டன ..புகைப்படங்கள்!

  • amazonTraders

    Amazon, Flipkart- க்கு எதிராக டெல்லியில் நேற்று போராட்டத்தில் குதித்த அகில இந்திய வணிகர்கள் சங்கம்!

  • dubaiairshow2019

    துபாயில் வெகு விமர்சையாக நடைபெற்ற விமான கண்காட்சி: கண்கவர் சாகசங்களை செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீரர்கள்!

  • LAautoshow

    லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆட்டோ ஷோ: பார்வையாளர்களை அரசவைத்த BMW, Mercedes கார்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்