SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பில்லூர் ஆதிபட்டதளச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் : திரளான பக்தர்கள் தரிசனம்

2019-09-05@ 14:15:27

தோகைமலை, செப்.5: தோகைமலை அருகே பில்லூரில் ஸ்ரீஆதிபட்டதளச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திராளான பக்தா–்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.கரூர் மாவட்டம் தோகைமலை அருகே பில்லூரில் உள்ள ஊராளிக்கவுண்டா் பில்லூர்நாட்டு பொன்னம்பலங்கரையான பில்லூர், பெரியவீட்டுக்காரன்பட்டி, முத்தகவுண்டம்பட்டி, தாதம்பட்டி, வையமலைபாளையம், செங்காட்டுபட்டி, கஸ்தூரிகுரும்பட்டி, பூசாரிபட்டி, முள்ளிபாடி, தாளகுளத்துப்பட்டி, க.புதுக்கோட்டை, தங்கமாபட்டி ஆகிய 12 ஊர் பங்காளிகளின் குலதெய்வமான ஸ்ரீ ஆதிபட்டதளச்சியம்மன், ஸ்ரீ கருப்பசாமி ஸ்ரீ மதுரைவீரன் ஸ்ரீ ஏழு கன்னிமாரிஅம்மன், ஸ்ரீ பட்டவன், முனியப்ப சாமிகள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தனிதனியே கோயில்கள் உள்ளது. இந்த கோயில்களுக்கு பில்லூர் நாட்டு பொன்னம்பலங்கரை பங்காளிகள் சார்பில் திருப்பணிகள் செய்தனர்.

பின்னா் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து காவிரி நதியில் இருந்து பால் குடம், தீர்த்த குடங்கள் எடுத்து வரப்பட்டு கோயிலில் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்தனர்.3 நாட்கள் விக்னேஸ்வரர், வாஸ்து சாந்தி, ரக்ஷாபந்தனம் எந்திர ஸ்தாபனம், கோயிலில் உள்ள சுதைகளுக்கு கண்திறத்தல் உள்பட பல்வேறு யாகசாலை பூஜைகள் செய்தனா். பின்னா் யாத்ராதானம், தீபாராதனை பிறகு கடம் புறப்பாடு நடந்தது. பின்னர் ஸ்ரீ ஆதிபட்டதளச்சியம்மன், ஸ்ரீ கருப்பசாமி ஸ்ரீ மதுரைவீரன் ஸ்ரீ ஏழு கன்னிமாரிஅம்மன், ஸ்ரீ பட்டவன், முனியப்ப சாமிகள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கருடன் வானத்தில் வட்டமிட்டது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஓம்சக்தி பராசக்தி என்று கூறி தரிசனம் செய்தனர்.

அதைதொடர்ந்து சிறப்பு அர்ச்சனை தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடந்தது. பின்னர; பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் குளித்தலை எம்.எல்.ஏ. ராமர். , மணப்பாறை சிந்துஜா மருத்துவ மனையின் தலைமை மருத்துவர் கலையரசன், பில்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் ராகவன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சந்திரசேகா், பில்லூர் நாட்டாண்மை ராமசாமிகவுண்டர், டாக்டா–்கள் கார்த்திகேயன், தமிழ்வாணன், குமார், பில்லூர் ஊராட்சி மன்ற செயலாளர் வெங்கடேஷ்வரன் மற்றும் பில்லூர், பெரியவீட்டுக்காரன்பட்டி, முத்தகவுண்டம்பட்டி, தாதம்பட்டி, வையமலைபாளையம், செங்காட்டுபட்டி, கஸ்தூரிகுரும்பட்டி, பூசாரிபட்டி, முள்ளிபாடி, தாளகுளத்துப்பட்டி, க.புதுக்கோட்டை, தங்கமாபட்டி ஆகிய ஊர்களின் முக்கியஸ்தர்கள் மற்றும் பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பில்லூர் ஆதிபட்டத்தளச்சியம்மனை வழிபட்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்