SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காணிப்பாக்கம் விநாயகர் கோயில் பிரமோற்சவத்தின் 2வது நாள் - நெமிலி வாகனத்தில் சுவாமி வீதி உலா : பக்தர்கள் திரண்டு தரிசனம்

2019-09-05@ 14:14:37

சித்தூர், : காணிப்பாக்கம் விநாயகர் கோயில் பிரமோற்சவத்தின் 2வது நாளில் நெமிலி வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.காணிப்பாக்கம் சுயம்பு வரசித்தி விநாயகர் கோயிலில் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் கோலாகலமாக தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் ஒவ்வொரு வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.பிரமோற்சவத்தின் முதல் நாளான நேற்றுமுன்தினம் மாலை அம்ச வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 2வது நாளான நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது.

பின்னர் மாலை நெமிலி வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி மேளதாளம் முழங்க நான்குமாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் திரண்டு கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக ரெட்டி வம்சத்தை சேர்ந்தவர்கள் விநாயகர் வீதி உலாவை தொடங்கி வைத்தனர்.விழாவையொட்டி நகர் முழுவதும் ஏராளமான சிசிடிவி கேமராக்கள் பொருத்தி 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரமோற்சவத்தின் 3வது நாளான இன்று மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதி உலா வருகிறார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-11-2019

    20-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • indiraganthipics

    இந்தியாவின் ஒரே பெண் பிரதமரான மறைந்த இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு!

  • pakmissiletest

    இந்தியாவுக்கு போட்டியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஷாஹீன்-1 ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்!

  • indhragandhi102

    இந்திரா காந்தியின் 102வது பிறந்த தினம் இன்று: சோனியாகாந்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை

  • californiagunshot

    பார்ட்டியில் புகுந்து மர்மநபர்கள் சரமாரி துப்பாக்கிசூடு: கலிஃபோர்னியாவில் நடந்த இந்த சம்பவத்தில் 4 பேர் பலி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்