SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவெங்கனூர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

2019-09-05@ 14:13:57


அரியலூர்: திருவெங்கனூர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.திருமானூர் அருகே உள்ள திருவெங்கனூர் கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 3ம் தேதி அனுக்ஞை, விக்னேஷவர பூஜையுடன் துவங்கியது. இதைதொடர்ந்து மாலை 6 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கும்ப அலங்காரம், துவார பூஜை நடந்தது. இரவு 10 மணிக்கு மேல் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜனம், சூரியகால பூஜை, 2ம் கால யாகபூஜை நடந்தது. 9 மணிக்கு மேல் யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு நடந்தது. பின்னர் கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்