SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேலக்கோட்டை முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு

2019-09-05@ 14:13:22

திருமங்கலம்: மேலக்கோட்டையில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் நேற்று நடந்த கும்பாபிஷேகத்தில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.திருமங்கலத்தை அடுத்துள்ள மேலக்கோட்டையில் முத்தாலம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் 3ம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கியது. பல்வேறு சிறப்பு பூஜைகள் அன்று நடந்தன.

தொடர்ந்து நேற்று அதிகாலை இரண்டாம்நாள் யாகசாலை பூஜைகள் நடந்தது. கணபதி பூஜை, கோ பூஜை, புண்ணியாகவாசனம், பஞ்சஸ்தல ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்து மகாதீபாராதனை நடந்தது. பின்னர் யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட கலசங்கள் அடங்கிய கும்பங்களுடன் கடங்கள் புறப்பட்டு கோயிலின் கோபுரத்தை சிவாச்சாரியர்கள் அடைந்தனர். செங்கபடையைச் சேர்ந்த பட்டாச்சியர் சீனிவாசகண்ணன் தலைமையில் காலை 10.20 மணிக்கு முத்தாலம்மன் கோயலின் கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.

இதில் திருமங்கலம், மேலக்கோட்டை, கீழக்கோட்டை, உச்சப்பட்டி, கப்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர். தொடர்ந்து கும்பாபிஷேகத்த காணவந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மேலக்கோட்டை கிராம பொதுமக்கள் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்