SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சின்னமநாயக்கன்பட்டியில் சிவகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

2019-09-05@ 14:12:41

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களா சின்னமநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள சிவகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா அதிவிமர்சையாக நடைபெற்றது.விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக விக்னேஷ்வரர் பூஜை, வாஸ்துசாந்தி முதலாம் கால யாகசாலைபூஜையுடன் தொடங்கி எந்திரஸ்தாபனம் அஷ்டபந்தனமருந்து சாத்தி கோபுரகலசம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இரண்டாம் நாளாக நேற்று இரண்டாம்கால யாகசாலை பூஜை தொடங்கி மண்டப சாந்தி மற்றும் மஹாபூர்ணாஹீதி நடைபெற்றது. அதன்பின் கடம்புறப்பட்டு அழகர்கோவில், பாபநாசம், ராமேஸ்வரம், கொடுமுடி உள்ளிட்ட புண்ணியஸ்தலங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட புனிதநீரினை கோபுரகலசத்தில் ஊற்றி மீனாட்சியம்மன் ஆலய அர்ச்சகர் சிவஸ்ரீ பிரகாஷ்சிவாச்சாரியார் கும்பாபிஷேகம் செய்தார். கும்பாபிஷேக விழாவையொட்டி சிவகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் அர்ச்சனைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 13-11-2019

    13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • vagaidamflood

    பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது!

  • bangladeshtrain

    வங்கதேசத்தில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 16 பேர் பலியான சோகம்!

  • wildfireaus

    காட்டுத்தீ காரணமாக அபாய நிலையை எட்டியுள்ள ஆஸ்திரேலியா: பேரழிவு காரணமாக அவசரநிலை பிரகடனம்

  • hongkongprofire

    ஹாங்காங் போராட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்: வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபருக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்