SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவில் தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை

2019-09-04@ 14:38:33

மதுரை, -மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவில் இன்று தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை நடந்தது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மாதந்தோறும் திருவிழா நடந்து கொண்டே இருக்கும். சித்திரை திருவிழாவிற்கு அடுத்ததாக, முக்கிய திருவிழாவாக ஆவணி மூல திருவிழா உள்ளது. இத்திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாணிக்கம் விற்ற திருவிளையாடல் நடைபெற்றது. இன்று காலை 9 மணியளவில் கோயில் மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் தருமிக்குப் பொற்கிழி அளித்த திருவிளையாடல் நடந்தது. அதனை தொடர்ந்து அம்மன், சுவாமி தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி சித்திரை வீதி, கீழப்பட்டமார் தெரு, வடக்கு ஆவணி மூலவீதி வழியாக ராமசாமி பிள்ளை மண்டபத்தில் எழுந்தருளினர். இரவு 8 மணிக்கு அம்மன் யானை வாகனத்திலும், சுவாமி தங்கச்சப்பரம் வாகனத்திலும் எழுந்தருளி கீழ ஆவணி மூலவீதி வழியாக கோயிலுக்கு வருகின்றனர். நாளை உலவாக் கோட்டை அருளிய திருவிளையாடல் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-11-2019

    20-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • indiraganthipics

    இந்தியாவின் ஒரே பெண் பிரதமரான மறைந்த இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு!

  • pakmissiletest

    இந்தியாவுக்கு போட்டியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஷாஹீன்-1 ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்!

  • indhragandhi102

    இந்திரா காந்தியின் 102வது பிறந்த தினம் இன்று: சோனியாகாந்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை

  • californiagunshot

    பார்ட்டியில் புகுந்து மர்மநபர்கள் சரமாரி துப்பாக்கிசூடு: கலிஃபோர்னியாவில் நடந்த இந்த சம்பவத்தில் 4 பேர் பலி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்