SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நரசிங்கபுரம் நரசிம்ம பெருமாள் கோயிலில் சுவாதி திருமஞ்சனம் : திரளான பக்தர்கள் தரிசனம்

2019-09-04@ 14:32:25

திருவள்ளூர், -திருவள்ளூர் அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் பழமைவாய்ந்த ஸ்ரீமரகதவல்லி சமேத ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் மூலவர் நரசிம்மர், தாயாரை மடிமீது அமர்த்தி அணைத்த கோலத்தில், ஏழரை அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கிறார்.இங்கு மாதந்தோறும் பெருமாள் பிறந்த நட்சத்திரமான சுவாதி அன்று மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். இன்று சுவாதி என்பதால், பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவர் நரசிம்ம பெருமாளை தரிசித்தனர். நினைத்த காரியம் கைகூட நெய் தீபம் ஏற்றி, கோயிலை 32 முறை வலம் வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். விழாவையொட்டி காலை 5.30 மணிக்கு கோபூஜை நடந்தது. தொடர்ந்து யாக பூஜையுடன் திருமஞ்சனம் நடந்தது. பகல் ஒரு மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 07-12-2019

    07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RioStarFerrisWheel

    பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • ambedh_day11

    இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

  • SydneyOrangeSky19

    ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

  • victoriafallsdry2019

    தென் ஆப்ரிக்காவில் நிலவும் வறட்சி: விக்டோரியா அருவியில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவில் குறைந்த தண்ணீர் வரத்து

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்