SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புல்லட்டில் ஹெல்மெட் அணிந்தபடி விநாயகர் வீதியுலா : பக்தர்கள் வியப்பு

2019-09-04@ 14:17:45

திண்டிவனம்,: திண்டிவனம் சந்தைமேட்டில் உள்ள வழிகாட்டி விநாயகர் ஆலயத்தில் 30ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விநாயகர்  சதுர்த்தியை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள விநாயகருக்கு அபிஷேக ஆராதனை  மற்றும் மகா தீபாராதனைகள் வாணவேடிக்கைகளுடன் நடைபெற்றது.இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட விநாயகர் புல்லட்டில் ஹெல்மெட் அணிந்தபடி  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வீதி வீதியாக சென்று  அருள்பாலித்தார்.

இருசக்கர வாகன ஓட்டிகளிடம் காவல்துறையினர்  ஹெல்மெட் அணிய பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இருப்பினும் சாமியே ஹெல்மெட் அணிந்து  வருவதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இனி தாங்களும் ஹெல்மெட்  அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்ட மாட்டோம் என்று உறுதி மொழி எடுத்தனர்.  புல்லட் மோட்டார் சைக்கிளில் விநாயகர் ஹெல்மெட் அணிந்து வந்ததை பக்தர்கள் வியப்பாக பார்த்தனர். மேலும் சாமி ஊர்வலத்தில் கோயில் முக்கியஸ்தர்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்