SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சதுர்த்தி விழாவை முன்னிட்டு 32 அடி உயர விஸ்வரூப விநாயகர் சிலை ஊர்வலம்

2019-09-03@ 17:36:00

நாகை, : விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 32 அடி உயர விஸ்வரூப விநாயகர் சிலை ஊர்வலம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.நாகை மாவட்டத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாகை நீலாயதாட்சி அம்மன் சமேத காயாரோகண சுவாமி கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது. விஸ்வரூப விநாயகர் குழு சார்பில் அமைக்கப்பட்டுள்ள 32 அடி உயர விஸ்வரூப விநாயகர் சிலைக்கு நேற்று இரவு 7 மணி அளவில் கொழுக்கட்டைகள், பழங்கள், சுண்டல் ஆகியவற்றை வைத்து நைவேத்தியம் செய்து சிறப்பு ஆராதனைகள் நடந்தது. பிரதிஷ்டை விநாயகர், பஞ்சலோக விஸ்வரூப விநாயகருக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகருக்கு அர்ச்சனை செய்தனர். கோவை ஜமாப், கேரள ஜண்டை, இடிக்கி பகவதியம்மன் நடனம், தஞ்சை தப்பு, தாரை, பொம்மலாட்டம், ரதம் ஒயிலாட்டம், மயிலாட்டம், பூங்கரகம், காவடியாட்டம் உள்ளிட்ட மங்கல இசை முழங்க நீலா கீழவீதியில் இருந்து 32 அடி உயர விஸ்வரூப விநாயகர் ஊர்வலம் தொடங்கியது. அங்கிருந்து நீலா தெற்கு வீதி, நீலா மேலவீதி, வடக்கு வீதி, அபிராமி அம்மன் திடல், அண்ணா சிலை, ஆஸ்பத்திரி சாலை, புதிய பஸ் ஸ்டாண்ட், தம்பித்துரை பூங்கா, காடம்பாடி, தெற்கு மற்றும் வடக்கு பால்பண்ணைச்சேரி, கலெக்டர் அலுவலகம் வழியாக நாகூர் மெயின்ரோடு வந்தது. வழிநெடுகிலும் விடிய விடிய அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் தங்கள் வீடுகள் முன்பு நின்று விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர்.

இதனால் நாகை நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. நாகூர் மெயின்ரோட்டில் இருந்து தேரடி கடந்து வெட்டாற்று பாலத்தை இன்று (3ம் தேதி) அதிகாலை ஊர்வலம் வந்தடைந்தது. பின்னர் பொதுமக்கள் முன்னிலையில் பிரதிஷ்டை விநாயகர் சிலையை படகில் கொண்டு சென்று வெட்டாற்றில் கரைத்தனர். விழாவை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சக்தி விநாயகர் குழு சார்பில் நாகை சவுந்திரராஜ பெருமாள் கோவில், ஆரியநாட்டுத் தெரு, நல்லியான்தோட்டம், ஏழைப்பிள்ளையார்கோவில், காடம்பாடி, கீரைக்கொல்லைத்தெரு, பெருமாள் கீழவீதி, நாகூர், அந்தணப்பேட்டை, பனைமேடு, சூரனு£ர், கீழ்வேளூர், வேளாங்கன்னி உள்ளிட்ட பகுதிகளில் 125 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

நேற்று முதல் அர்ச்சனை, ஆராதனைகள் நடந்து வருகிறது. சக்தி விநாயகர் குழு சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் வரும் 8ம் தேதி சவுந்தரராஜ பெருமாள் கோவிலிருந்து ஊர்வலமாக தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக எடுத்து செல்லப்பட்டு அதிபத்த நாயனார் அவதரித்த நாகை நம்பியார் நகர் கடற்கரையை சென்றடையும். பின்னர் விஷேச பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை விநாயகர் படகு மூலம் எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும். நாகூர் சிவன் சன்னதியில் மாவட்ட சிவசேனா சார்பில் 18 அடி உயர வீரவிநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் வீநாயகர் ஊர்வலம் நாகூர் மெயின் ரோடு வழியாக சென்று படகில் விநாயகரை கொண்டு சென்று வெட்டாற்றில் கரைத்தனர்.

விநாயகர் சதுர்ச்சியை முன்னிட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கொழுக்கட்டை, சுண்டல், பருப்பு, ஆப்பிள், வாழைப்பழம் உள்ளிட்ட பழங்களை வைத்து மண்ணால் செய்யப்பட்ட விநாயகருக்கு படையலிட்டு வழிபட்டனர். அந்த விநாயகரை மறுநாளோ, மூன்றாம் நாளோ அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைப்பார்கள். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • deepam-5

  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 5-ம் நாளான இன்று உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் பெரிய வெள்ளி ரிஷப வாகனத்தில் உலாவந்தனர்

 • 06-12-2019

  06-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • cambodiyaa_insects1

  கிரிக்கெட்டு பூச்சி சீஸ் கேக், கட்டெறும்பு ஸ்ப்ரிங் ரோல்.. பூச்சி உணவுகளை பரிமாறும் உணவகம் : கம்போடியாவில் ருசிகரம்

 • saxophomne_chinaaa

  40 வருடங்களாக சாக்சஃபோன் இசைக் கருவிகளை தயாரித்து வரும் இசைக் கிராமம்!

 • jayalalitha_admk11

  இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு நாள்! : கருப்புச் சட்டையுடன் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள் அமைதி பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்