SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆவணி திருவிழா சாமிதோப்பு தலைமை பதியில் தேரோட்டம் : பக்தர்கள் திரளாக பங்கேற்பு

2019-09-03@ 17:34:42


தென்தாமரைகுளம், : ஆவணி திருவிழாவையொட்டி சாமிதோப்பு தலைமை பதியில் தேரோட்டம் நடந்தது.சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் ஆவணி திருவிழா கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 11ம் திருவிழாவான நேற்று மதியம் 12 மணிக்கு தேரோட்டம் நடந்தது. சிறப்பு பணி விடைகளுடன் அலங்கரிக்கப்பட்ட தொட்டில் வாகனத்திலிருந்து அய்யா வைகுண்டர் பஞ்சவர்ண தேரில் எழுந்தருளினார். அய்யா வழி பக்தர்கள் அய்யா சிவ சிவ அரகரா அரகரா என்ற பக்தி கோஷத்துடன் திருத்தேரினை வடம்பிடித்து இழுத்தனர்.

நிகழ்ச்சிக்கு குரு பாலஜனாதிபதி தலைமை வகித்தார். முத்துகுடைகள் முன்செல்ல தேரானது நான்கு ரத வீதிகளிலும் சுற்றி வந்தது. வடக்கு வாசலில் பக்தர்கள் அய்யாவுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், பன்னீர், எலுமிச்சை, பூ மற்றும் பழங்கள் வைத்து சுருள் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் தேர் நிலை சேர்ந்தது. தொடர்ந்து பணிவிடைகள், அன்னதர்மம், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இரவு 12 மணிக்கு வாகன பவனி நடைபெற்றது.

 திருவிழா ஏற்பாடுகளை குரு பாலஜனாதிபதி, ராஜவேல், பாலலோகாதி பதி, பையன் கிருஷ்ணராஜ், பையன் ரெகு, பையன் செல்லவடிவு, ஜனா யுகேந்த், ஜனா வைகுந்த், லோக் பாலபிரசாந்த், பையன் நேம்ரிஷ், பையன் அம்ப்ரிஷ், கௌதம் ஆகியோர் செய்திருந்தனர்.  திருவிழாவில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பாதுகாப்புக்காக 50க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுத்தபட்டிருந்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • deepam-5

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 5-ம் நாளான இன்று உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் பெரிய வெள்ளி ரிஷப வாகனத்தில் உலாவந்தனர்

  • 06-12-2019

    06-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • cambodiyaa_insects1

    கிரிக்கெட்டு பூச்சி சீஸ் கேக், கட்டெறும்பு ஸ்ப்ரிங் ரோல்.. பூச்சி உணவுகளை பரிமாறும் உணவகம் : கம்போடியாவில் ருசிகரம்

  • saxophomne_chinaaa

    40 வருடங்களாக சாக்சஃபோன் இசைக் கருவிகளை தயாரித்து வரும் இசைக் கிராமம்!

  • jayalalitha_admk11

    இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு நாள்! : கருப்புச் சட்டையுடன் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள் அமைதி பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்