SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேவி முத்தாரம்மன் கோயில் கொடைவிழா கொடியேற்றம்

2019-09-03@ 17:34:08

உடன்குடி,: உடன்குடி அருகேயுள்ள பிறைகுடியிருப்பு தேவி முத்தாரம்மன் கோயில் வருடாந்திர கொடைவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 5நாட்கள் நடக்கிறது.உடன்குடி அருகேயுள்ள பிறைகுடியிருப்பு தேவி முத்தாரம்மன், மகாமாரியம்மன், உஜ்ஜைனி மாகாளி அம்மன், பத்திரகாளி அம்மன் கோயில் வருடாந்திர கொடை விழா செப்2ம் தேதி காலை 5.30மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து யாகசாலையில் புனித நீர் எடுத்து அம்மன்களுக்கு அபிஷேகம் நடந்தது. கோயில் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு கொடிமரத்திற்கு பல்வேறு வகையான அபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. நண்பகல் 12மணிக்கு குரு பூஜை தொடர்ந்து அன்னதானம் நடந்தது. மாலை 7மணிக்கு நாடு நலம் பெற வேண்டி ஏராளமான பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடந்தது.

இன்று செப்.3ம்தேதி அதிகாலை 2மணிக்கு சிறப்பு பூஜையுடன் கும்பம்தெரு வீதி வருதல்,  நண்பகல் 2மணிக்கு சிறப்பு பூஜையுடன் கும்பம் தெரு வீதி வருதல் நடக்கிறது. செப்.4ம் தேதி அதிகாலை 2மணிக்கு சிறப்பு பூஜையுடன் அன்னை முத்தாரம்மன் அன்ன வாகனத்தில் பவனி வருதல், கும்பம்தெரு வீதி உலா, முளைப்பாரி ஊர்வலம் ஆகியவை நடக்கிறது. காலை 7மணிக்கு பால்பூஜை, நண்பகல் 2மணிக்கு மஞ்சள் பெட்டி பவனி வருதல், தொடர்ந்து சிறப்பு பூஜையுடன் கும்பம்தெரு வீதி வருதல், மாலை 6மணிக்கு சுவாமிகள் மஞ்சள்நீராடுதல், இரவு 7மணிக்கு கூழ்வார்த்தல், தொடர்ந்து தீபாராதனை  நடக்கிறது.

செப்.5ம்தேதி அதிகாலை 2மணிக்கு சிறப்பு பூஜையுடன் அன்னை முத்தாரம்மன் சிம்மவாகனத்தில் பவனி வருதல், நண்பகல் 2மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 8மணிக்கு கலைநிகழ்ச்சி, தொடர்ந்து வில்லிசை நடக்கிறது. செப்.6ம்தேதி அதிகாலை 2மணிக்கு சிறப்பு பூஜையுடன் முத்தாரம்மன் தேரில் பவனி வருதல், காலை 7மணிக்கு கொ டியிறக்க சிறப்பு பூஜை, காலை 9மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல், இரவு 9மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி, நள்ளிரவு 12மணிக்கு ஒத்தப்பனை சுடலைமாடன் சுவாமிக்கு சிறப்பு பூஜையுடன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா திருபாப்பு, தலைவர் சிவந்திமுருகேசன், செயலாளர் சிவ.சிவராஜா, பொருளாளர் ராஜசேகரன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.   

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 08-12-2019

    08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-12-2019

    07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RioStarFerrisWheel

    பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • ambedh_day11

    இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

  • SydneyOrangeSky19

    ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்