SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாழ்வில் செல்வம் செழிக்க செய்ய வேண்டிய பரிகாரம்

2019-08-29@ 10:46:55

விண்ணில் இருக்கும் நட்சத்திரங்களை கூட மனிதர்களால் எண்ணிவிட முடியும். ஆனால் ஆழ்கடலில் இருக்கின்ற பல மர்ம அதிசயங்கள் இன்று வரையிலும் மனிதர்களுக்கு முழுமையாக தெரியவில்லை. நமது புராணங்களில் கடல் ஒரு ஆன்மீக முக்கியத்துவம் பெற்ற ஒரு இயற்கை அமைப்பாக இருக்கிறது. கடலை சமுத்திரராஜன் என்கிற பெயரில் இந்து மதத்தினர் வணங்குகின்றனர். தேவர்கள் மற்றும் அசுரர்கள் கடைந்த பாற்கடலில் இருந்து தான் இறவா வரம் தரும் அமிர்தம், மகாலட்சுமி தேவி ஆகியோரை உலகம் கிடைக்கப் பெற்றது. அந்த கடலில் கிடைக்கின்ற ஒரு அற்புதமான தெய்வீக சக்தி நிறைந்த ஒரு பொருள் தான் சங்கு ஆகும். சங்கில் பல வகைகள் இருக்கின்றன. இதில் சிறியது முதல் பெரியது வரை இருக்கும் வலம்புரிசங்கு தெய்வீக வழிபாட்டில் முக்கியத்துவம் பெறுகிறது. வலம்புரி சங்கு கொண்டு செய்யப்படுகின்ற ஒரு எளிய பரிகார முறையை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். சங்கு என்பது ஆழ்கடலில் வாழ்கின்ற ஒருவகையான நத்தையின் ஓடு ஆகும்.

அந்த சங்கில் வலம்புரி சங்கு இடம்புரி சங்கு என்று இரு வகையில் உள்ளன. இதில் வலம்புரி சங்கு மட்டுமே தெய்வீக ஆற்றல்களை கொண்ட சங்கு என முன்னோர்கள் வரையறுத்துள்ளனர். வலம்புரி சங்கு மற்றும் லட்சுமி தேவியின் அம்சம் நிறைந்த ஒரு இயற்கை பொருளாகும். வலம்புரி சங்கை வீட்டில் வைத்திருந்தாலே பல விதமான தோஷங்கள் நீங்கும் என்றும், துஷ்ட சக்திகள் அணுகாது எனவும் கூறப்படுகிறது. காரணம் அந்த சங்கை நம் காதில் ஒற்றி கேட்கும் போது அதனுள் “ஓம்” எனப்படும் ஓங்கார நாதம் தொடர்ந்து ஒலிக்கின்ற ஒரு அதிர்வை ஏற்படுத்துவதால் தான் என கூறுகின்றனர். இந்த சங்கு என்பது மனிதர்களின் வாழ்வில் இடம்பெறும் தவிர்க்க முடியாத ஒரு தெய்வீகப் பொருளாக இருக்கிறது. பிறந்த குழந்தைக்கு பாலூட்டும் சடங்கு செய்யும் போது வலம்புரி சங்கில் பால் ஊற்றி குழந்தைகளுக்கு ஊட்டுவதால் தெய்வங்களின் அருளாசிகள் அக்குழந்தைக்கு கிடைக்கிறது. அதே போன்று ஒரு மனிதன் இறந்த பிறகு சங்கநாதம் எழுப்பி, அவருக்கான இறுதி சடங்கு செய்வதால் இறந்த அந்த நபரின் ஆன்மா சொர்க்கலோகம் செல்லும் என்பது நம்பிக்கை. மேலும் முக்கியமான கோயில் விழாக்களில் சங்கநாதம் எழுப்பி செய்யப்படுகின்றன.

இப்படி பல அற்புதமான தன்மைகளை பெற்றிருக்கும் சங்கில் ஒரு வகையான வலம்புரி சங்கு கொண்டு செய்யப்படும் பரிகாரம் பற்றி தெரிந்துகொள்ளலாம். உங்களிடம் இருக்கின்ற சிறிய அளவிலான வலம்புரிசங்கை எடுத்துக்கொண்டு, அதில் சுத்தமான நீரை நிரப்பி வடக்கு அல்லது கிழக்கு திசை பார்த்தவாறு நின்று, அந்த சங்கை இடக்கரத்தில் வைத்துக்கொண்டு, உங்கள் வலது கரத்தை அந்த சங்கின் மீது வைத்து மூடி, கண்களை மூடிக்கொண்டு “ஓம் சுதர்சனாய நமஹ” “ஓம் மஹா விஷ்ணவே நமஹ” என்கிற மந்திரத்தை குறைந்தது 108 முறை 1008 ஒருவரை துதித்து முடித்த பின் அந்த சங்கு தீர்த்தத்தை சிறிது உங்கள் வலது கையில் விட்டு, அந்த நீரை உங்கள் தலையில் தெளித்து, மீண்டும் சிறிது நீரை வலது கையில் விட்டு தீர்த்தமாக அருந்த வேண்டும். இந்த சங்கு பரிகாரத்தை செய்த பிறகு நீங்கள் வெளியில் செல்கின்ற எந்த ஒரு காரியமும் உங்களுக்கு சாதகமாக முடியும். முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். உடல் மற்றும் மனதில் ஆன்மிக பலம் பெருகும். தெய்வீக அருள் அதிகரிக்கும். செல்வங்களின் சேர்க்கை பன்மடங்கு பெருகும். தோஷங்கள், திடீரென ஏற்படும் ஆபத்துகள் விலகும். இந்த சங்கு பரிகார முறையில் மிகவும் சிறந்த பலன்களை பெற சங்கு தீர்த்தத்தில் இரண்டு துளசி இலைகளை விட்டு அந்த நீரை அருந்துவது பலன்கள் பன்மடங்கு பெருகச் செய்யும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 12-11-2019

  16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • jet15

  1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்

 • amgun

  அமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு

 • zimbabwe_elephant111

  ஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு

 • peru_kovilll11

  பெருநாட்டில் பூமிக்கு அடியில் புதையுண்டு கிடந்த 3000 ஆண்டுகால பழமை வாய்ந்த 21 கோபுரங்களுடன் கூடிய ஆலயம் கண்டுபிடிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்