SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நம்புகிறவருக்கு எல்லாம் நல்லனவாக நிகழும்!

2019-08-29@ 10:18:54

‘‘மக்கள் அனைவரும் இயேசுவைக் கண்ட உடனே மிக வியப்புற்று ஓடிப்போய் அவரை வாழ்த்தினர். அவர் அவர்களை நோக்கி, ‘‘நீங்கள்  இவர்களோடு எதைப்பற்றி வாதாடுகிறீர்கள்? என்று கேட்டார். அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் அவரைப் பார்த்து, ‘‘போதகரே! தீய ஆவி பிடித்துப் பேச்சிழந்த என் மகனை உம்மிடம் கொண்டு வந்தேன். அது அவனைப்பிடித்து அந்த இடத்திலேயே அவனைக்கீழே தள்ளுகிறது. அவன் வாயில் நுரை தள்ளிப்பற்களை நெறிக்கிறான். உடம்பும் விறைத்துப் போகிறது. அதை ஓட்டிவிடும்படி நான் உம் சீடரிடம் கேட்டேன், அவர்களால் இயலவில்லை என்று கூறினார். அதற்கு அவர் அவர்களிடம், ‘‘நம்பிக்கையற்ற தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? அவனை என்னிடம் கொண்டு வாருங்கள்’’ என்று கூறினார்.

அவர்கள் அவனை அவரிடம் கொண்டு வந்தார்கள். அவரைக்கண்டவுடன் அந்த ஆவி அவனுக்கு வலிப்பு உண்டாக்க அவன் தரையில் விழுந்து புரண்டான். வாயில் நுரை தள்ளியது. அவர் அவனுடைய தந்தையைப் பார்த்து, ‘‘இது இவனுக்கு வந்து எவ்வளவு காலம் ஆயிற்று?’’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘‘குழந்தைப் பருவத்திலிருந்து இது இவனுக்கு இருந்து வருகிறது. இவனை ஒழித்துவிடத் தீயிலும், தண்ணீரிலும் பலமுறை அந்த ஆவி இவனைத் தள்ளியதுண்டு. உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள் மீது பரிவு கொண்டு எமக்கு உதவி செய்யும்’’ என்றார். இயேசு அவரை நோக்கி, ‘‘நம்புகிறவருக்கு எல்லாம் நல்லனவாக நிகழும்’’ என்றார். உடனே அச்சிறுவனின் தந்தை, ‘‘நான் நம்புகிறேன், என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்’’ என்று கத்தினார்.

அப்போது மக்கள் கூட்டம் நம்மிடம் ஓடிவருவதைக்கண்ட இயேசு, அத்தீய ஆவியை அதட்டி, ‘‘ஊமைச் செவிட்டு ஆவியே, உனக்குக் கட்டளையிடுகிறேன், இவனை விட்டுப்போ, இனி இவனுள் நுழையாதே என்றார். அது அலறி அவனுக்கு மிகுந்த வலிப்பு உண்டாகி வெளியேறியது. அச்சிறுவன் செத்தவன் போலானான். ஆகவே அவர்களுள் பலர் ‘‘அவன் இறந்துவிட்டான் என்றனர். இயேசு அவன் கையைப் பிடித்துத் தூக்கி விட்டார். அவனும் எழுந்தான்.அவர் வீட்டில் நுழைந்ததும் அவருடைய சீடர் அவரிடம் தனிமையாக வந்து, ‘‘அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை? என்று கேட்டனர். அதற்கு அவர், ‘‘இவ்வகை பேய், இறை வேண்டலினாலும், நோன்பினாலும் அன்றி வேறு எதனாலும் வெளியேறாது என்றார்.’’ - (மாற்கு 9:15-29)

வாய்ப்பு என்பது எப்போதுமே நமது காலடிகளுக்குக் கீழேயே உள்ளது. நாம் இதனைத் தேடி வேறு எங்கும் போக வேண்டியதே இல்லை. நாம் செய்ய வேண்டியதெல்லாம் அந்த வாய்ப்பைக் கண்டுணர்வதேயாகும். எப்போதுமே இக்கரைக்கு அக்கரைப் பச்சையாகத்தான் தெரியும். அக்கரையில் உள்ள பசுமையை நாம் நன்றாக இருக்கிறதே என்று பார்த்துக் கொண்டிருக்கும்போது, வேறு சிலரோ நாமிருக்கும் கரையைப் பசுமையாளராகப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் சந்தோஷமாக நம்மிடம் இடம் மாற்றிக்கொள்ள விரும்புவார்கள். வாய்ப்பினை எப்படிக் கண்டுணர்வது என்று தெரியாதவர்கள் அந்த வாய்ப்பு அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டும்பொழுது அந்த சத்தத்தைப் பற்றிக் குறை கூறிக்கொண்டிருப்பார்கள். ஒரு வாய்ப்பு இருமுறை வருவதில்லை. அடுத்த வாய்ப்பு நல்லதாகவோ, கெட்டதாகவோ இருக்கலாமே தவிர ஒரு பொழுதும் அதே வாய்ப்பாக இருக்காது.

- ‘‘மணவைப்பிரியன்’’
ஜெயதாஸ் பெர்னாண்டோ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-09-2019

  17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • dragan_canadaa

  கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

 • gurgaun_cameraa1

  குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

 • apayin_kuppai11

  ஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்

 • protest_dailymail111

  சீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்