SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மோதகம்

2019-08-29@ 10:08:11

என்னென்ன தேவை?

மேல் மாவு :

அரிசி மாவு / இடியப்ப மாவு - 1/2 கப்,
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி,
உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.

தேங்காய் பூரணம் :

துருவிய தேங்காய் - 1 கப்,
வெல்லம் - 1 கப்பிலிருந்து 3 மேஜைக்கரண்டி எடுத்து விடவும்,
ஏலக்காய் - 2

மோதகம் எப்படி செய்வது?

போதுமான தண்ணீரை, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். மாவில், உப்பு சேர்த்து, கொதிக்கும் தண்ணீரை ஊற்றி பிசையவும். ஒரு தோசைத்திருப்பியின் காம்பு கொண்டு கிளறலாம். அல்லது ஒரு கரண்டி கொண்டும் கிளறலாம். சிறிது கை பொறுக்கும் சூட்டிற்கு வந்தவுடன், நன்கு பிசைந்து,  12 சமமான அளவு உருண்டைகளாக உருட்டி, மூடிவைக்கவும். வெல்ல பூரணத்திற்கு, தேங்காய், மற்றும் வெல்லத்தை ஒன்றாக மிதமான தீயில் வைத்து கிளறவும். வெல்லம் இளகி, நன்கு தேங்காயுடன் கலந்து மறுபடியும் இறுகும் வரை கிளறி, ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து இறக்கவும். ஆறியபின் சம அளவு உருண்டைகளாக உருட்டவும். கைகளில் சிறு துளி எண்ணெய் தடவி, உருட்டிய மாவு உருண்டையை,  மெல்லிய தடிமன் உள்ள கிண்ணமாக செய்யவும். உள்ளே பூரண உருண்டையை வைத்து, மூடி, அழகாக மோதகம் வடிவில் ஷேப் செய்யவும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி, செய்த மோதகங்களை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • watervapormoon

    வியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா!

  • kuwaitcamelRace

    குவைத்தில் ஒட்டகங்களுக்கான ஓட்டப்பந்தயம்: ரோபோ ஜாக்கி மூலம் ஒட்டகங்கள் போட்டியிட்டன ..புகைப்படங்கள்!

  • amazonTraders

    Amazon, Flipkart- க்கு எதிராக டெல்லியில் நேற்று போராட்டத்தில் குதித்த அகில இந்திய வணிகர்கள் சங்கம்!

  • dubaiairshow2019

    துபாயில் வெகு விமர்சையாக நடைபெற்ற விமான கண்காட்சி: கண்கவர் சாகசங்களை செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீரர்கள்!

  • LAautoshow

    லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆட்டோ ஷோ: பார்வையாளர்களை அரசவைத்த BMW, Mercedes கார்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்