SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தானியங்களை விளைய வைப்பார் காணிப்பாக்கம் விநாயகர்

2019-08-28@ 10:46:51

ஆந்திர மாநிலம் சித்தூருக்கு அருகே உள்ளது காணிப்பாக்கம். இங்கு கோயில் கொண்டுள்ள விநாயகர், ஸ்ரீகாணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். பேச்சிழந்தவர், பார்வையிழந்தவர், செவியிழந்தவர் ஆகிய மூவரும் சேர்ந்து கிணற்று நீரைக்கொண்டு விவசாயம் செய்து வந்தனர். பார்வையிழந்தவரும், செவியிழந்தவரும் ஏற்றங்காலில் மேல் நின்று மிதிக்க, கிணற்றிலிருந்து நீரை கமலை சுமந்துவர, பேச்சிழந்தவர் அதைக் கையால் பற்றி, வயல் ஓடைக்குள் பாய்ச்சுவது வழக்கம். ஒரு நாள் இப்படி மூவரும் முயன்றபோது விநாயகர் உருவமாக இல்லாமல், முன்பக்கம் துதிக்கை வளைவுபோன்ற அமைப்புடன் சிறு பாறை ஒன்று வந்து விழுந்தது.

மண்வெட்டியால் அதை வெட்டியபோது அதிலிருந்து ரத்தம் பீறிட்டது. உடனே மூவராலும் அதே கணத்தில், பேசவும், கேட்கவும், பார்க்கவும் முடிந்தன.  அந்த மண்வெட்டித் தடம் இன்றும் விநாயகரின் தலையின் பின்புறம் சிறு பள்ளமாகக் காணப்படுகிறது. சிறு குடிசை வேய்ந்து அதற்குள் விநாயகரை பிரதிஷ்டை செய்தார்கள். திடீரென்று அந்த கிராம மக்களுக்குள் பொங்கிய பக்தி உணர்வால் பல நூறு தேங்காய்கள் அவருக்கு உடைக்கப்பட்டு நிவேதனம் செய்யப்பட்டன. அந்த தேங்காய்கள் நீர், காணி நிலத்தில் ‘பாரகமா’னதால் (தெலுங்கில் பாரகம் என்றால், நீர் பாய்தல் என்று பொருள்) இத்தலம் காணிப்பாரகம் என்றழைக்கப்பட்டு, காணிப்பாக்கம் என்று மருவியது.

இவர்முன் யாரேனும் பொய் சத்தியம் செய்தால் அவ்வாறு செய்பவர் தொண்ணூறு நாட்களுக்குள் விநாயகரால் தண்டிக்கப்படுவார் என்பது பலரது அனுபவ உண்மை. கிணற்றிலிருந்து கிடைத்த விநாயகர் என்பதால் அந்த கிணறுக்கு மேலேயே ஒரு மேடை அமைத்து அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அவரைச் சுற்றி என்றுமே வற்றாத கிணறு. அந்த கிணற்று நீர்தான் மக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
தீய பழக்கங்களிலிருந்து விடுபட விரும்புபவர்கள் இவர்முன் வந்து ‘இனி புகை, மது, மாது, சூது நாடமாட்டேன்’ என்று வேண்டிக் கொண்டால், அவர்கள் உடனடியாக அப்பழக்கத்திலிருந்து விடுபடுகிறார்களாம். காணிப்பாக்கம், சித்தூர் பேருந்து நிலையத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

 • 03-06-2020

  03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • schoolopen3

  சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்