SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அறியாமையிலிருந்து விடுபடுவோம்

2019-08-21@ 10:16:16

இறுதி நாள்களில் கொடிய காலங்கள் வரவிருக்கின்றன என அறிந்துகொள். தன்னலம் நாடுவோர், பண ஆசையுள்ளோர், வீம்புடையோர், செருக்குடையோர், பழித்துரைப்போர், பெற்றோருக்குக் கீழ்ப்படியாதோர், நன்றியற்றோர், தூய்மையற்றோர், அன்புணர்வு அற்றோர், ஒத்துப்போகாதோர், புறங்கூறுவோர், தன்னடக்கமற்றோர், வன்முறையாளர், நன்மையை விரும்பாதோர், துரோகம் செய்வோர், கண்மூடித்தனமாகச் செயல்படுவோர், தற்பெருமை கொண்டோர், கடவுளை விரும்புவதைவிட சிற்றின்பத்தை அதிகம் விரும்புவோர் ஆகியோர் தோன்றுவர். இவர்கள் இறைப்பற்று உடையவர்கள் போன்று காணப்படுவார்கள். ஆனால் இறைப்பற்றின் வல்லமையோ அவர்களிடம் இராது.

இத்தகையவர்களோடு சேராதே. இத்தகையோரில் சிலர் வீடுகளில் நுழைந்து பேதைப் பெண்களைத் தம் வயப்படுத்திக் கொள்கின்றனர். இப்பெண்கள் பல்வேறு தீய நாட்டங்களால் கவரப்பட்டு பாவங்களில் மூழ்கியுள்ளனர். இவர்கள் ஓயாமல் கற்றுக்கொண்டே இருந்தாலும் ஒருபோதும் உண்மையை அறிந்துகொள்ள மாட்டார்கள். இயன்னே, இயம்பிரே என்போர் மோசேயை எதிர்த்து நின்றதுபோல இம்மனிதர்களும் உண்மையை எதிர்த்து நிற்கிறார்கள். இவர்கள் சீரழிந்த மனம் கொண்டவர்கள். விசுவாசத்தில் தேர்ச்சியற்றவர்கள். ஆனால் இனி இவர்கள் அதில் முன்னேற மாட்டார்கள். ஏனெனில் அவ்விருவருக்கும் நேரிட்டது போன்று இவர்களின் அறியாமை வெளியாகி விடும்.’’ - (II தீமோத்தேயு 3: 1-9)

ஒரு சிறுவனைத் தண்ணீர் கொண்டுவர கிணற்றுக்கு அனுப்பினார் அவர். ஜாக்கிரதை, பானையை உடைத்து விடாதே என்று கூறி பையனின் தலையில் குட்டினார். இதைப்பார்த்த ஒருவர் பதறிப்போய், தவறு செய்யாத அச்சிறுவனை ஏன் தண்டிக்கிறீர்? என்றார். யோவ்! அறிவில்லாமல் ஏன் பேசுகிறீர்? பானையை உடைத்தபிறகு அவனைத் தண்டித்து என்ன பயன்? என்றார் அவர். தட்டிக்கேட்டவர் அமைதியாக நடையைக் கட்டினார். நாமெல்லோரும் இயற்கையாகவே சில ஆற்றல்களைப் பெற்றிருக்கிறோம். சிட்டுக்குருவியின் உருவம் என்னவோ மிகவும் சிறியதே. இச்சிறிய உருவமே இக்குருவிக்கு தனது இறகுகளை ஒரு நொடிக்கு 75 தடவை அடித்துக்கொள்வது போன்ற சிக்கலான வேலைகளைச் செய்யக்கூடிய ஆற்றலைத் தருகிறது.

இக்குருவியால் காற்றில் மிதந்தபடியே பூக்களில் உள்ள தேனைக் குடிக்க முடியும். ஆனால் வானில் மிக உயரத்தில் சிறகடிக்காமல் மிதந்தவாறு பறக்கவோ, தரையில் குதித்துக் குதித்துச் செல்லவோ அதனால் இயலாது. நெருப்புக்கோழியோ அதிக எடையுடன் கூடிய பறவை. உருவமும் பெரிது. இருந்தும் அதனால் பறக்க இயலாது. ஆனாலும் 12 மற்றும் 15 அடிகளுக்குத் தாவித்தாவி ஒருமணி நேரத்தில் 15 மைல்கள் வரைக்கும் ஓடக்கூடிய மிக வலிமையான கால்களை அது பெற்றிருக்கிறது. ‘‘ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறு பெற்றோர். அவர் தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்ச்சி அடைவர். அவர்களது வழி மரபு பூ உலகில் வலிமை மிக்கதாய் இருக்கும். நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசி பெறும். சொத்தும், செல்வமும் அவர்களது இல்லத்தில் தங்கும். அவர்களது நீதி என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவர்களிடையே மிளிர்வர். அருளும், இரக்கமும், நீதியும் உள்ளோராய் இருப்பர்.’’ - (திருப்பாடல்கள் 112: 1-4)

- ‘‘மணவைப்பிரியன்’’
ஜெயதாஸ் பெர்னாண்டோ.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • flood18

  இத்தாலியில் ஒரே வாரத்தில் 3வது முறையாக வெள்ளப்பெருக்கு: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 • fire18

  மேகாலயாவில் நூற்றாண்டு பழமையான தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து: 2 பேர் பலி, ஏராளமான பொருட்கள் சேதம்

 • light18

  கிறிஸ்துவ பண்டிகை: பாரிஸில் கடல் உயிரினங்கள் வடிவில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான விளக்குகளின் தொகுப்பு

 • snow18

  சீனாவில் கடும் பனிப்பொழிவுடன் வீசிய அதிவேக காற்று: பனிமூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

 • 18-11-2019

  18-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்