SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முலுண்ட் இந்திரா நகரில் மாரியம்மன் கோயில் திருவிழா கோலாகலம்

2019-08-07@ 16:16:46

சிறப்பு பூஜைகளுடன் விமரிசையாக நடந்தது

முலுண்ட்:  முலுண்ட் மேற்கு ரயில் நிலையம் அருகில் இந்திரா நகரில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நேற்று காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கிய, இந்நிகழ்ச்சியில் காலை 9 மணிக்கு நாகுர் காவ் பகுதியிலிருந்து பூங்கரகம், பால்குடம், அலகு குத்துதல், தீச்சட்டி ஏந்தி புறப்பட்ட பக்தர்கள் இந்திராநகர் குடிக்கொண்டுள்ள  மாரியம்மன் கோயிலுக்கு 11.45 மணியளவில் வந்தடைந்தனர். அதன்பின்னர் அப்பகுதியை சேர்ந்த பெண்களும், பிற பகுதியை பெண்களும் சேர்ந்து பால்குடம், கூழ்குடம், மாவிளக்கு எடுத்து வந்து அம்மன் முன்பு வைத்தனர்.

பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. அதன்பின்பு பக்தர்கள் பூஜை செய்து படையலிட்டு வழிபட்டனர். இதைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பூசாரி பிரசாதம் வழங்கினார். பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை மற்றும் பாலாபிஷேகம் நடைபெற்றது. பூஜையில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் அம்மனுக்கு கூழ் படைக்கப்பட்டது. கோயில் உள்ள மாரியம்மன் சிலையை அடுத்து சுடலைமாட சுவாமி, தாய் பேச்சியம்மாள் மற்றும் இசக்கியம்மாள் ஆகிய தெய்வங்களின் சிலைகள் சந்தனத்தால் வடிவமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஸ்ரீ மாரியம்மனையும், சுடலைமாட சுவாமியையும் வழிபட்டனர். இந்நிகழ்வில் பெண் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பூஜை முடிவுக்குப்பின்னர் மதியம் 1 மணிக்கு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கபட்டது. மாலை 4.30 மணிக்கு பெண்கள், அம்மனுக்கு பொங்கல் வைத்து படையலிட்டனர். இரவு 11 மணிக்கு இடும்பன் பூஜை மற்றும் கும்பம் கொட்டுதல் நிகழ்வு நடைபெற்றது. அப்பகுதி மக்கள் ஆதரவுடன் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி விழா கமிட்டியினர் கே. கருணாநிதி, என்.எஸ் ஏழுமலை, கே. சேகர், பி. குமார், கே. நாராயணன், எஸ். விஜயபாண்டியன், ஏ.எஸ் விநாயகம், எம். வைத்தியலிங்கம், பி.கே முருகன் உட்பட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-11-2019

    17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 12-11-2019

    16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • jet15

    1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்

  • amgun

    அமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு

  • zimbabwe_elephant111

    ஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்