SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சித்ரா பௌர்ணமி தகவல்கள் ட்வென்ட்டி20

2013-12-11@ 16:00:48

சித்ரா பௌர்ணமியன்று திருவண்ணாமலை அருணாசலத்தை கிரிவலம் செய்ய லட்சக் கணக்கில் மக்கள் திரளுவார்கள். அவர்களோடு தேவர்களும்  சித்தர்களும் ஞானிகளும் சூட்சுமமாக மலையை வலம் வருகிறார்கள் என்பது ஐதீகம்.

ராஜபாளையம்-அயன்கொல்லங் கொண்டான் அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் சித்ரா பௌர்ணமியை ஒட்டி நடக்கும் சக்தி பூஜையில் பூசாரிகள்  சாமியாடி இரண்டு வாள்களை குடத்தின் மீது வைத்து அந்தரத்தில் நிறுத்துவார்கள். இதை அலகு பூஜை என்கிறார்கள்.  

சித்ரா பௌர்ணமியன்று காஞ்சி வரதனை பிரம்மதேவன் பூஜிப்பார். பிரம்மன் வரதனுக்கு நிவேதிக்கும் பிரசாதம் கமகமவென மணம் வீசுமாம். உண்ட  திருப்தியை வரதனின் வதனத்தில் காணலாம் என்கிறார்கள் பட்டர்கள்.  

சித்ரா பௌர்ணமியன்று ஈசனுக்கு சுத்தான்னம் எனப்படும் வெண் சோற்றில் நெய் கலந்து படைத்தால் நம் இல்லத்தில் லட்சுமி கடாட்சம்  தாண்டவமாடுமாம்.  

சித்ரா பௌர்ணமியன்று பூமியிலிருந்து தோன்றும் பூமிநாதம் எனும் உப்பு நோய்களைத் தீர்க்கும் என்றார்கள் சித்தர்கள். ஆகவே அச்சமயத்தில்  கிரிவலம் செய்வது உடல் நலத்துக்கு உகந்தது என்பார்கள்.    

ஆதிசங்கரர் ஜெயந்தி, ராமானுஜர் சாத்துமுறை, சித்திரகுப்தர் திருக்கல்யாணம், ஸ்ரீரங்கத்தில் கஜேந்திர மோட்ச சேவை ஆகியவை சித்ரா பௌர்ணமி  அன்று அமோகமாக கொண்டாடப்படும் வைபவங்கள்.

சித்திரை நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடுவதால் கடலில் நீராடுதல் நன்று. இது கர்ம வினைகளை அறுக்கும் என்பது சித்தர்களின் திண்ணமான  வாக்கு.

தேனி மாவட்டத்தை அடுத்து, தமிழக-கேரள எல்லையில், ஐயாயிரம் அடி உயரமான மலைமீது மங்கலதேவி கண்ணகி கோயில் உள்ளது. இது சித்ரா  பௌர்ணமி அன்று ஒருநாள் மட்டுமே திறந்திருக்கும்.  

சித்திரை மாதத்தில் பௌர்ணமியாக வரும் நிலவை மட்டுமே முழு நிலவு என்பது மரபு.

யமனின் கணக்காளரான சித்திரகுப்தருக்குரிய நாளாகவும் சித்ரா பௌர்ணமி போற்றப்படுகிறது.

திருக்குற்றால மலை மீதுள்ள சித்ரா நதி உற்பத்தியானது இதே நாளில்தான்.

சித்ரா பௌர்ணமி அன்றுதான் மதுரை சோமசுந்தரப் பெருமானை தேவேந்திரன் பொற்றாமரை மலர்களால் அர்ச்சித்தான்.  

கி.பி. 985-1013ல் சோழமன்னன் சித்ரா பௌர்ணமி தினத்தில் அன்னதானம் செய்ய அறக்கட்டளை ஏற்படுத்தியிருந்ததாக திருச்சி மலைக்கோட்டை  கல்வெட்டு தெரிவிக்கிறது.

உளுந்தூர்பேட்டைக்கு அருகே கூவாகத்தில் அரவான் கள பலி உற்சவம் திருநங்கைகளால் சித்ரா பௌர்ணமி தினத்தன்று கொண்டாடப்படுகிறது.  உலகெங்கிலும் இருந்து திருநங்கைகள், இந்நாளில் கூவாகத்தில் ஒன்று திரளுவர்.  

சித்ரா பௌர்ணமியன்று மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி மண்டூக மகரிஷிக்கு அருள் செய்யும் வைபவம் நடக்கிறது.

பொதுவாகவே பௌர்ணமி அன்று கன்னியாகுமரியில் ஒரே சமயத்தில் சூரிய அஸ்தமனமும், சந்திரோதயமும் நிகழ்வதைக் காண்பது ஆனந்தம் தரும்.  அதையே சித்ரா பௌர்ணமி அன்று காண்பது பேரானந்தம்.

கும்பகோணத்திற்கு அருகே திருக்கோடிக்காவல் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி தினத்தன்று சித்திர குப்தனுக்கும் யமதர்மராஜனுக்கும் விசேஷ  பூஜைகள் நடைபெறுகின்றன.

காஞ்சிபுரம் சித்திரகுப்தன் ஆலயத்தில் கருவறையில் சித்திரகுப்தன் பிரதானமாக வீற்றருள்கிறார். கேதுவின் அதிதேவதையாக விளங்கும் இவருக்கு  சித்ரா பௌர்ணமி அன்று விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.

குற்றாலத்திலுள்ள செண்பகாதேவிக்கு சித்ரா பௌர்ணமி அன்று சிறப்பு ஆராதனைகள் நடத்தப்படும். அப்போது சந்தன வாசனையோடு கூடிய மழை  பெய்யும் என்பது நம்பிக்கை.

நாமக்கல் கொல்லிமலை அறப்பளீஸ்வரர் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி தினத்தன்று சித்தர்கள் நீராடிய பொய்கை, ஆலய தீர்த்தமான சரபேஸ்வர  தீர்த்தத்தில் கலப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • UkraineCoronaProtest

  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

 • puthu2020

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

 • rayil21

  ஆஸ்திரேலியாவில் நொடி பொழுதில் தரம்புரண்ட பயணிகள் ரயில்: 2 பேர் பலி...ஏராளமானோர் படுகாயம்!

 • coronaa_vugaan11

  கொரொனா வைரஸ் வராம பின்ன என்ன வரும்? - பறவைகள், முயல்கள், வெளவால்கள், பாம்புகள் விற்கப்படும் வுஹான் கடல் உணவு சந்தை!!!

 • pakistan21

  பெங்களூருவில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணியில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷம் போட்ட பெண் கைது: போலீசார் அதிரடி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்