SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்

2019-08-06@ 15:23:12

தேவையான பொருட்கள்

கொண்டைக் கடலை - ஒரு கப் (ஊறவைத்து, அரை உப்பு போட்டு வேகவைத்து கொள்ளவும்)
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
தேங்காய் துருவல் - இரண்டு டீஸ்பூன்
மேல் பொடி செய்ய
சீரகம் - ஒரு டீஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
தனியா- ஒரு டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் - இரண்டு
கடலைப்பருப்பு  - இரண்டு டீஸ்பூன்
அனைத்தையும் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

தாளிக்க

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - இரண்டு

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை போட்டு தாளிக்கவும். பிறகு, அதில் வேகவைத்த வெள்ளை கொண்டைக் கடலை, மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து மூன்று நிமிடம் கிளறவும். பின், பொடி சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-02-2020

    29-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • DelhiBackToNormal282

    வன்முறை ஓய்ந்த நிலையில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் வடகிழக்கு டெல்லி: புகைப்படங்கள்

  • president20

    எகிப்தில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்: இராணுவ இறுதி சடங்கு செலுத்தி ஆதரவாளர்கள் அஞ்சலி

  • saudipudhuvellai11

    ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’.. சவூதி அரேபியா பாலைவனங்களில் அரிதான பனிப்பொழிவு

  • vaanvali20

    சிரியா வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பரிதாப உயிரிழப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்