SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாலி கயிறை என்று எப்படி மாற்றலாம் தெரியுமா ?

2019-08-02@ 11:44:22

திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்வில் இன்றியமையாததாகும். அதுவும் நமது இந்திய கலாச்சாரத்தில் இந்த திருமண பந்தம் மிகவும் உயர்வாக போற்றப்பட்டு, இந்த திருமண நிகழ்வின் போது பலவிதமான சடங்குகள் பின்பற்றப்படுகின்றன. அதில் ஒன்று தான் மணமகன் மணமகளை தன் மனைவியாக்கி கொள்ள அப்பெண்ணின் கழுத்தில் கட்டும் தாலியாகும்.

திருமணத்தின் போது பெண்களின் உடல், மனம் மற்றும் ஆன்மீக நலனை கருத்தில் கொண்டு தங்கத்தில் தாலியின் பதக்கத்தை, அவரவர் குடும்ப பாரம்பரிய அடிப்படையில் வடிவமைத்து மஞ்சள் பூசப்பட்ட புது சரடில் இணைத்து, வேத மந்திரங்கள் முழங்க தெய்வங்கள் மற்றும் பெரியோர்களின் ஆசியோடு பெண்ணின் கழுத்தில் இந்த தாலியை மூன்று முடிச்சிட்டு அவளை ஊரும், சமூகமும் அறிய தனது மனைவியாக கொள்கிறான் ஒரு ஆண்.

புனிதமான தாலி கயிறு ஒரு பெண்ணின் கழுத்தில் இருப்பதால் அது அவளது அன்பிற்குரிய கணவனை அவளது இதயத்தில் வைத்து போற்றுவாள் என்பது ஒரு கருத்து. அதே நேரத்தில் மஞ்சள் பூசப்பட்ட கயிற்றில் தங்கத்தை சேர்த்து அணிந்து கொள்வதால் அது பெண்களை அதீத உணர்ச்சிவசபடாமல் கட்டுப்படுத்தி, அவர்கள் உடலின் சக்தியை அதிகம் வீணாகாமல் தடுக்கிறது.

ஆடி மாதத்தில் வரும் ஆடி பதினெட்டாம் பெருக்கு தினமானது திருமணமான சுமங்கலி பெண்களும், புதிதாக திருமணமான பெண்களும் புனித நதிக்கரைகளில் அல்லது கோவில்களில் பூஜைகள் செய்து தங்களின் தாலி கயிற்றில் பழைய சரடை நீக்கிவிட்டு புதிய மஞ்சள் பூசப்பட்ட சரடில் தாலியின் தங்கத்தை இணைத்து அணிந்து கொள்வது தொன்று தொட்டு கடைபிடிக்க படும் ஒரு வழக்கமாகும்.

இத்தகைய சுப தினத்தில் கண்டிப்பாக பெண்கள் தலை குளித்தல் வேண்டும். நண்பகலுக்கு முன்பாக காலையில் நல்ல நேரத்தில் உங்கள் குல தெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வணங்கி, புது கயிற்றில் மஞ்சள் பூசி அதில் தாலி நகையை கோர்த்து மாற்றிக்கொள்ள வேண்டும். இச்செயலை அமர்ந்த நிலையிலேயே செய்ய வேண்டும். இது அப்பெண்களுக்கும் அவர்களது கணவன் மற்றும் அவளை சார்ந்த அனைவருக்கும் நன்மைகளை உண்டாகும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 14-11-2019

  14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • afghanblast

  ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

 • venicerain

  இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

 • isrealattack

  காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

 • 13-11-2019

  13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்