SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆடி அமாவாசை : கன்னியாகுமரியில் லட்சக்கணக்கானோர் பலிகர்ம பூஜை

2019-07-31@ 16:59:33

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஆடி அமாவாசை தினத்தையொட்டி இன்று லட்சக்கணக்கானோர் புனித நீராடி பலிகர்ம பூஜை நடத்தி வழிபட்டனர்.இறந்த தங்களது முன்னோர்களின் நினைவாக ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை போன்ற புனித நாட்களில் ஆறு, நதி, கடல் போன்ற நீர் நிலைகளில் புனித நீராடி, பலி தர்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டால் அவர்களின் ஆன்மா சாந்தியடைவதோடு, முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஆடி அமாவாசை தினமான நேற்று கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அதிகாலையில் இருந்தே குவிந்த லட்சக்கணக்கானோர் புனித நீராடினர். பின்னர் 16 கால் மண்டப கடற்கரை பகுதிகளில் அமர்ந்திருக்கும் வேத விற்பணர்களிடம், முன்னோர்களின் நினைவாக எள், பச்சரிசி, பூ போன்றவைகளால் தர்பணம் செய்து அவற்றை வாழை இலையில் வைத்து தலையில் சுமந்தபடி கடலின் கிழக்கு திசைநோக்கி நின்று புனித நீராடி தர்பணம் செய்தனர். பின்னர் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு சென்று பகவதிஅம்மனை வழிபட்டனர்.

ஆடி அமாவாசையையொட்டி பகவதியம்மன் கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு கோயிலில் வழக்கமாக நடைபெறும் விஸ்வரூபதரிசனம், நிர்மால்யபூஜை, அபிஷேகம், தீபாராதனை, நைவேத்ய பூஜை, உஷபூஜை உள்ளிட்டு பூஜைகளை முடித்து 5 மணியிலிருந்து மதியம் 1 மணிவரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை ஆகியவை நடைபெறுகிறது. இரவு 8.30 மணிக்கு வெள்ளிகலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு முக்கடலில் அம்மனுக்கு ஆராட்டும் நடைபெறுகிறது . பின்னர் கோயில் கிழக்கு வாசல் நடைதிறக்கப்பட்டு அம்மன் கோயில் பிரவேசம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஆடிஅமாவாசையையொட்டி இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் குமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் கன்னியாகுமரிக்கு சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்த எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு ஒரு வழிப்பாதையை செயல்படுத்தி இருசக்கர வாகனங்களை அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள கெலிபேடு வளாகத்தில் நிறுத்த அனுமதிக்கப்பட்டது. இதனால் கடற்கரை பகுதியில் நெருக்கடி குறைவாக இருந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • DelhiBackToNormal282

  வன்முறை ஓய்ந்த நிலையில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் வடகிழக்கு டெல்லி: புகைப்படங்கள்

 • president20

  எகிப்தில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்: இராணுவ இறுதி சடங்கு செலுத்தி ஆதரவாளர்கள் அஞ்சலி

 • saudipudhuvellai11

  ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’.. சவூதி அரேபியா பாலைவனங்களில் அரிதான பனிப்பொழிவு

 • vaanvali20

  சிரியா வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பரிதாப உயிரிழப்பு!

 • moon27

  பெரிய நிலவுக்கு போட்டியாக 3 ஆண்டுகளாக பூமியை வலம் வரும் குட்டி நிலா!: அதிசய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்